நடிகர் அருண் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் இருப்பதாக கூறி வந்த நிலையில், அருண் விஜய் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அருண் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் மோதல் முதலில் “சீமராஜா” படம் வெளியானதில் இருந்து தொடங்கியது. அப்போது சிவாவின் ரசிகர்கள் அவரை புகழ்ந்து மாஸ் ஹீரோ என மீம்ஸ்கள் போட, பதிலுக்கு அருண் விஜய் ஒரு ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் “நீயெல்லாம் மாஸ் ஹீரோவா? யார் யாரெல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு, தமிழ் ஆடியன்ஸ்க்கு தெரியும், உண்மையான திறமைசாலிகளுக்கு மட்டுமே அவர்கள் ஆதரவு கொடுப்பார்கள்” இவ்வாறு பதிவிட்டு இருந்தார். கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அருண்விஜய் ட்விட்டர் கமெண்ட்டில் திட்டி தீர்த்து விட்டனர். பின்னர் அந்த பதிவை நான் போடவில்லை, என்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. தற்போதுதான் சரி செய்யப்பட்டுள்ளது. அந்த பழைய பதிவுகள் என்னுடையதல்ல என்று விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் இவர்கள் இருவருக்கும் மோதல் இருப்பதாகவே பார்க்கப்பட்டது. சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு எதிரில் வந்த அருண் விஜயை பார்க்காதது போல் நேராக சென்றுவிட்டார் சிவா. உண்மையில் கூட்ட நெரிசலில் அவர் பார்க்கவில்லைதான். ஆனால் சிவா வேண்டுமென்றே அருண் விஜயை பார்க்காமல் சென்றுவிட்டதாக அருண்விஜய் ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த சர்ச்சைகளை எல்லாம் முடிவுக்கு கொண்டுவரும் விதமாக சிவா ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்தார். அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள யானை திரைப்படத்தின் ட்ரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார். அருண் விஜயை சகோதரா என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை கண்டு நெகிழ்ந்து போன அருண் விஜய் பதிலுக்கு நன்றி சகோதரா..! உங்கள் வெற்றியைப் பார்த்தும் எனக்கும் சந்தோஷமாக உள்ளது என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு முன்னதாகவே அருண் விஜய் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார் சிவா.
தற்போது அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து முதன்முறையாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் உங்களுக்கும் சிவாவுக்கும் மோதலா என்ற ரீதியில் கேள்வி கேட்க, சிவா எனக்கு ஒரு நல்ல நண்பர், சக நடிகர், அவருக்கும் எனக்கும் பிரச்சினை இருப்பதாக மீடியாக்கள் உங்களால் கிளப்பி விடப்பட்டது, அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது என்று சற்று காட்டமாகவே கூறிவிட்டு சென்றார். அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் முழுப்பேட்டியை நீங்களும் காண.. Watch the below Video..
Video Courtesy: i Tamil News