“நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்”!!திடீரென உதயநிதியை புகழ்ந்த கமல்ஹாசன்.

விநியோகிஸ்தராக திரைத்துறையில் அறிமுகமாகி குருவி, மன்மதன் அம்பு, ஆதவன் போன்ற படங்களை வெற்றிகரமாக விநியோகிஸ்து பின்னர் நாயகனாக “ஒரு கல் ஒரு கண்ணாடி” படம் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அவர் அப்படி எந்த அலட்டலும் இல்லாமல் முதல் படத்தில் சந்தானத்திடம் மொக்கை வாங்குவதும், காமெடியாக நடிப்பதும் என ஜாலி ஹீரோவாக நடித்திருந்தார் அவர்.

"நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்"!!திடீரென உதயநிதியை புகழ்ந்த கமல்ஹாசன். 1

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து மனிதன், சரவணன் இருக்க பயமே, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, பொதுவாக என் மனசு தங்கம், கெத்து என பல படங்களில் நாயகனாக நடித்தார். பின்னர் அரசியல் பணி காரணமாக கொஞ்ச நாள் வெளியாகி இருந்த இவர், இப்பொது மீண்டும் “நெஞ்சுக்கு நீதி” என்ற படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். படம் கடந்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மீண்டும் விநியோகிஸ்தராக களம் இறங்கியுள்ள உதயநிதி பீஸ்ட், டான், நெஞ்சுக்கு நீதி என்ற படங்களை வெளியிட்டுள்ளார். இப்பொது மீண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான “விக்ரம்” படத்தின் உரிமையை வாங்கி தமிழகத்தில் வெளியிட உள்ளார். நாளை வெளியாக உள்ள படத்தை இப்பொது பார்த்துள்ள உதயநிதி, “இவ்வளவு சிறப்பாக படத்தை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் மற்றும் மற்ற படக்குழுவிற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்து ட்விட்டரில் பதிவினை போட்டு இருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  மாநாடு படத்தின் First Single Meherezylaa Teaser | சிலம்பரசன் யுவன்

"நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்"!!திடீரென உதயநிதியை புகழ்ந்த கமல்ஹாசன். 3

இப்பொது நடிகர் கமல், அதற்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு சிறந்த ரசிகர் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டர்கள், படத்தை வாழ்த்தியமைக்கு நன்றி” என எழுதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

ஏற்கனவே எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் இப்பொது இன்னுமும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கமலுடன் “விக்ரம்” படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சூர்யா என பலர் நடிக்க, அனிருத் இசை அமைத்துள்ளளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “ராஜ் கமல் பிலிம்ஸ்” படத்தை தயாரித்துள்ளது. படம் மிக பெரிய எதிர்ப்பரப்புக்கு மத்தியில் நாளை வெளியாக உள்ளது.

"நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்"!!திடீரென உதயநிதியை புகழ்ந்த கமல்ஹாசன். 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment