Categories: சினிமா

Yaanai – Official Trailer..அருண் விஜய், ஹரி கூட்டணி வேற லெவல்..ட்ரைலரே மரண மாஸாக இருக்கு

வெளியிட்டது

இயக்குனநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம்தான் யானை. இந்த படத்தின் படப்பிடப்புகள் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் மே 30ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தது படக்குழு. அதன்படி படத்தின் ட்ரைலர் மாஸாக வெளியாகியுள்ளது. படம் மே மாத விடுமுறைக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகிறது. ட்ரைலர் வீடியோ கீழே உள்ளது.

Yaanai - Official Trailer..அருண் விஜய், ஹரி கூட்டணி வேற லெவல்..ட்ரைலரே மரண மாஸாக இருக்கு 1

இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குநர் ஹரி கடைசியாக இயக்கிய படம் சாமி 2. இந்த படம் 2018ம் ஆண்டு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை, எனவே அடுத்த கூட்டணியாக தனது மனைவி ப்ரீத்தாவின் அண்ணனும், மச்சானுமாகிய அருண் விஜய்யுடன் இணைந்து யானை படத்தை இயக்கி வருகிறார் ஹரி. கிராமத்து கதைக்களத்தை பிண்ணனியாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் காமெடியனாக நடிக்கிறார். ராதிகா, போஸ் வெங்கட் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். Youtube Video Code Embed Credits:

இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்பு அதன் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் படம் வெளியாவதற்கு முன்பே அதன் உரிமையை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும். சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் ஹரி கொடுத்த சிங்கம் திரைப்படங்கள் போலவே அருண் விஜயுடன் முதல் முறையாக இணைந்த இந்த கூட்டணி வெற்றியை தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி உள்ளது. அந்த ட்ரைலரை நீங்களும் காண..Watch the yaanai Movie Trailer below..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்