ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆர்யா நடிப்பில் கடைசியாக உருவான படம் டெடி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவுடன் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் கேப்டன் என்ற படத்தில் இணைந்திருந்தார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து இருக்கின்றன. அறிவியல் மற்றும் மிருகங்களை மையப்படுத்தி படங்களை எடுப்பதில் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் கை தேர்ந்தவராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் மிருதன், டிக் டிக் டிக், டெடி, நாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து அடுத்து ஏலியன் கதையை மையப்படுத்தி கேப்டன் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரி உத்தமன் உள்ளிட்டவர் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து யுவன் பாடிய நினைவுகள் என்ற பாடல் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த நிலையில் கேப்டன் என்கிற படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் ஆர்யா நடித்திருக்கிறார். ஏலியன்களை ஒழிக்கும் முயற்சியில் இருக்கும் இராணுவ குழுவை மையப்படுத்தி இந்த படம் இருப்பதாகவே தெரிகிறது. நீங்களும் இந்த படத்தின் டிரைலரை காண.. Watch the Captain Trailer Below..
YouTube Video Code Embed Credits: Think Music India