ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் மிரட்டி விடும் வகையில் இருப்பதாகவும், தலைவர் வேற லெவலில் இருப்பதாகவும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார். திரைத்துறைக்கு வந்து 47 ஆண்டுகளை கடந்துவிட்ட அவருக்கு சமீபத்தில்தான் அவரது மகள்கள் கேக் வெட்டி கொண்டாடினர். பாலசந்தர் அறிமுகத்தில் என்ற படத்தில் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த். திறமைக்கு அழகோ, நிறமோ தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டியவர். அதனாலேயே அவரை முன்மாதிரியாக கொண்டு பலரும் ரசிகர்களாக உள்ளனர். ரஜினிகாந்த் இதுவரை 168 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது அவர் 169வது படமாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் இன்று துவங்கியுள்ளன. இதையொட்டி அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் “அண்ணாத்த”. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. எனவே தனது அடுத்த படத்தின் கதையை்மிக கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டு இருந்தார் ரஜினிகாந்த். அதற்காக அவர் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சனை தேர்வு செய்தார். ஆனால் நெல்சன் கடைசியாக இயக்கிய பீஸ்ட் படம் பெரிய தோல்வி அடையவே ரஜினிகாந்த் பின்வாங்கியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி நெல்சனுடன் கை கோர்த்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதில் வயதான தோற்றில் கண்ணாடி அணிந்தபடி உள்ளார். ஃபர்ஸட் லுக் போஸ்டரை பார்த்த இணையவாசிகள், jailer, Nelsondilipkumar போன்ற ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
Thakalii… Thalaivaa… 😧😧🤩😍🤩🔥🤩🔥🤩🔥
THALAIVAAA…..
Morattu look daa saaamyy..🔥🤩😍🔥🔥😍🔥😍
INAIKU AARAMBIKUTHU THIRUVIZHAA.. @rajinikanth aiyoo thalaivaaa… Godfather level..🔥🤩😍🤩😍#Jailer #Rajinikanth@Nelsondilpkumar naa..
😍😍🔥 @anirudhofficial pic.twitter.com/3CO1hxOMao— ▄︻デ𝘼𝙍𝙅.𝙈══━ (@aravindarajm005) August 22, 2022