நீண்ட நாட்களாக நடிகர் விஜயின் மீது இருந்த குற்றச்சாட்டு அவர் பெரிதாக கெட்டப் மாற்றி நடிப்பதில்லை, நடிக்கும் கதபாத்திரங்களில் வெரியேஷன் கொடுப்பதில்லை என அவருடைய நடிப்பின் மீதே தொடர்ந்து விமர்சங்கள் வைக்கப்பட்டு வந்தன.
“ராஜா ராணி” என்ற ஒரு படம் மட்டுமே இயக்கிய அட்லீ விஜயிடம் “தெறி” படத்தின் கதையை கூறி ஒப்புதல் பெற்று படம் இயக்க தொடங்கினர். விஜய் ஏற்று நடித்திராத ,முழு நீள போலீஸ் கதாபத்திரம். பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த விஜயின் மிக பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது.

வெறும் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் 150 கோடிகளை தாண்டி மாபெரும் வெற்றி படமாக விஜய் ரசிகர்களை மிகவும் திருப்திப்படுத்திய படமாக அமைந்தது. இருப்பினும் விஜய் ஒரே மாதிரி தான் நடிக்கிறார் என்ற விமர்சனம் அடங்கிய பாடில்லை. பின்னர் அடுத்த படத்தை இதே கூட்டணி அறிவித்தது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், விஜய், எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரமாண்ட பொருட்செலவில் மிக பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாகி தீபாவளிக்கு வெளியான இந்த படம், அன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் அதிக வசூல் செய்த வெற்றி படமாக உருவானது.
விஜய் மூன்று வேடங்களில், கிராமத்து நாயகனாகவும் சிட்டி நாயகனாகவும் மக்களையும் விமர்சகர்களையும் மிக பெரிய அளவில் கவர்ந்தார். மீண்டும் இதே கூட்டணி அடுத்த படத்திற்கு தயாரானது. மிக பெரிய பட்ஜெட், பெரிய நட்சத்திரங்கள் என அடுத்து உருவான “பிகில்” படமும் பெரிய வெற்றி.
ராயப்பனாக நடித்த விஜய்க்கு மிக பெரிய நல்ல விமர்சனங்களை இது கொடுத்தது. இது வரை விஜய் நடித்திராத கதாபாத்திரமாக, மக்களுக்கு அவருடைய நடிப்பில் மிகவும் பிடித்த கதாப்பாத்திரமாக மாறிப்போனது.
ஆனால் இயக்குனர் அட்லீ மேல் பெரிய நெகட்டிவ் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நிறைய காட்சிகளை காப்பி அடித்து எடுத்துள்ளார் என பல கட்டமான விமர்சனங்கள். ஆனால் அது அவரின் வளர்ச்சியாயி கொஞ்சம் கூட கெடுக்கவில்லை.
ஹிந்தி திரையுலகின் முன்னனி நட்சத்திரமான ஷாருக் கானுடன் இணைந்துள்ளார் இயக்குனர் அட்லீ. இப்பொது அந்த அப்படத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுளளார் அவர்.
ந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோ தங்களின் ட்விட்டர் பக்கத்தில், பிகில் படத்தில் வரும் காட்சி ஒன்றை வெளியிட்டு, அத்துடன், “ராயப்பனின் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் ” எனவும் கேட்டிருந்தனர். இதற்கு பிகில் படத்தில் விஜய் பேசும் “செஞ்சிட்டா போச்சு” வசனத்தை ரிப்ளேவாக கொடுத்துள்ளார் அட்லி.
இது இப்பொது பெரும் பேசும் பொருளாகி உள்ளது. மீண்டும் இந்த ஹாட்ரிக் கூட்டணி இணைய உள்ளதா? என ரசிகர்கள் யோசனையில் ஆழ்ந்துள்ளனர்.