தமிழ் திரையுலகில் நடிகர்களுக்கு சமமாக ரசகிர்கள் உண்டு என்றால் அது பிண்ணனி பாடுபவர்களுக்குதான். அந்த வகையில் தனது மெல்லிய குரலால் பல கோடி தமிழ் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் தான் ஸ்ரேயா கோஷல். கொல்கத்தா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவரின் குரலுக்கு ஒட்டுமொத்த இந்தியாவே ரசிகர்களாக இருக்கும். அந்த அளவிற்கு பாட்டில் தூள் கிளப்பி விடுவார் ஸ்ரேயா. பொதுவாகவே வட இந்திய பாடகர்கள் என்றால் தென்னிந்திய மொழிகளில் பாடும் பொழுது ஹிந்தியின் வாடை வீசும். ஆனால் ஹிந்தியின் கலப்பு கொஞ்சம் கூட இல்லாமல் தமிழை மிக அழகாக பாடுவதில் திறமைசாலி ஸ்ரேயா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி பல மொழிகளில் பாடி வருகிறார் ஸ்ரேயா. 16 வயதில் பாடத் தொடங்கிய இவர், தமிழின் முண்ணனி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், டி.இமான், அனிருத் போன்றவர்களுடன் பணியாற்றி உள்ளார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் வெற்றிதான். ஸ்ரேயாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை அவரின் நீண்ட நாள் நண்பரான ஷிலாதித்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. Youtube Video Code Embed Credits : Shreya Ghosal FC

இந்த நிலையில் கடந்த ஆண்டு தான் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்து இருந்தார் ஸ்ரேயா. தற்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது ஆகியுள்ளது. குழந்தைக்கு தேவ்யான் என்று பெயர் சூட்டியுள்ளார் ஸ்ரேயா. அவரின் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார் ஸ்ரேயா. அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். ஸ்ரேயாவின் ரசிகர்கள் அவரின் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது மகனுக்கு முதல் முறையாக உணவு வழங்கும் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video..