Categories: சினிமா

அட்டகத்தி Dinesh நடிக்கும் தண்டகாரண்யம்..! மிரட்டலாக வெளியாகிய FirstLook போஸ்டர்…!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் நாயகனாக  அறிமுகமாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை ரசிகர்களிடம்  பெற்று உள்ளவர் தினேஷ். அட்டகத்தி படத்தின்  வெற்றி இவரை முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருமாற்றியது. தொடர்ந்து  திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , விசாரணை என வெற்றிப்படங்களை படங்களை கொடுத்து முன்னணி நாயகன் என்ற இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து இருக்கிறார் அட்டகத்தி தினேஷ். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அட்டகத்தி Dinesh நடிக்கும் தண்டகாரண்யம்..! மிரட்டலாக வெளியாகிய FirstLook போஸ்டர்...! 1

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் அண்மையில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஊர்வசி நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் அட்டகத்தி தினேஷ். தற்போது இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படம் அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது.

தற்போது இவர் பா ரஞ்சித் தயாரிப்பில், இயக்குனர் அதிரை அதியன் இயக்கத்தில் தண்டகாரண்யம் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருடன் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை பா ரஞ்சித் தற்போது வெளியிட்டுள்ளார்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்