பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சுமார் 60 நாட்களை கடந்து விட்டது. இந்த சீசன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. 21 நபர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டியில் ராம் உட்பட 9 நபர்கள் வெளியேறி விட 12 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த சீசனை 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருவதால், மக்கள் நேரலையாக ஹவுஸ் மேட்ஸ் செய்யும் விஷயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார் தவறு செய்தார்கள்? யார் சரியாக பேசுகிறார்கள் என்பதை முன்கூட்டியே மக்கள் கணிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே சண்டை சச்சரவு என்று மிகவும் பரபரப்பாக இருந்து வருகிறது.

பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது. இரண்டாவது வாரத்தில் இருந்து எலிமினேஷன் செய்ய தொடங்குவர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து தானாக வெளியேறி விட்டார். தொடர்ந்து சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி என மொத்தம் எட்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் இரட்டை வெளியேற்றம் இருக்கும் என்று கமல் போன வாரமே அறிவித்து விட்டார். இதனால் இந்த வாரம் யார் வெளியே போவார்கள் என்ற பரபரப்பு கூடி இருந்தது. இந்த நிலையில் நேற்றே ராமை வெளியேற்றி விட்டனர்.
இந்த நிலையில் இன்று ஆயிஷா வெளியேறி இருக்கிறார். ஆயிஷா ஆரம்பத்தில் ஒழுங்காக விளையாடாமல் இருந்து வந்தார். ஆனால் ஷெரினா வெளியேறிய பிறகு அவர் கொஞ்சம் கொஞ்சம் திரையில் தெரிந்தார். இந்த நிலையில் போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி கொண்டே வருகிற காரணத்தினால் இரண்டு இரண்டு நபர்களாக வெளியேற்றப்படுவார்கள் என்று ரசிகர்கள் கணித்த நிலையில் அதே போல் இந்த வாரம் ஆயிஷா மற்றும் ராம் இருவரும் வெளியேறி இருக்கிறார்கள்.