நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இசையமைப்பாளராக இருந்து நடிகராக உருவெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு வெளியான நான் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, கொலைகாரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது தமிழரசன், அக்னிச் சிறகுகள் என்ற இரண்டு படங்களின் நடித்து முடித்துள்ளார் .இந்த இரண்டு படங்களும் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளன. ஆனால் ஏதோ சில காரணங்களால் இரண்டு படங்களும் தாமதமாகி கொண்டே இருக்கிறது. கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்.

தற்போது இவர் கைவசம் ஆறு படங்களின் நடித்து வருகிறார் பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் தமிழரசன். இந்த படத்தில் இவருடன் இணைந்து ரம்யா நம்பீசன், யோகி பாபு, சோனு சூட், சுரேஷ் கோபி, ராதாரவி, ரோபோ சங்கர், முனிஷ்காந்த், கஸ்தூரி, சங்கீதா போன்ற பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது.!

இந்தப் படத்தை பாபு யோகேஸ்வரன் என்பவர் எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் SNS மூவிஸ் சார்பாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது நீங்களும் அந்த ட்ரைலர் வீடியோவை பாருங்கள்.! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Divo Music