தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் சில பேர் பேசிக் கொண்டிருப்பதை நாம் பொருட்படுத்த தேவையில்லை என்று அசீம், தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 6 இன் வெற்றியாளராக இருக்கும் அசின் விக்ரமனை குறித்து இவ்வாறு போட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் கடந்த அக்டோபர் 9ஆம் தொடர் தேதி தொடங்கி 105 நாட்களை நிறைவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் முன்பு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களிடம் தொடங்கப்பட்டு இறுதியில் மூன்று பேருடன் நிறைவடைந்தது இருக்கிறது. இதில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் நிலவி வந்த நிலையில், பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக முடிவுகள் அமைந்திருந்தது. நடிகர் அசீம் டைட்டிலை வென்று 50 லட்சம் ரூபாய் மற்றும் மாருதி காரையும் வெற்றி பெற்றிருந்தார். மேலும் இந்த பரிசையும் இந்த வெற்றியையும் தனது மகன் ரயானுக்கு சமர்ப்பிப்பதாக அவர் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தார்.

இந்த நிலையில் அசீம் வெற்றி பெற்றது குறித்து பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். பலருக்கும் அசீமின் வெற்றி ஏற்புடையதாக இல்லை. பிக் யபாஸ் வீட்டில் இருந்தபோது சக போட்டியாளர்களை மதிக்க தெரியாமல் வாடா போடா என்றும் பெண்களை வாடி போடி என்றும் ஒருமையில் பேசி வந்த ஒருவர் எப்படி டைட்டில் கொடுக்கலாம்? இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று விஜய் டிவியை மக்கள் twitter மற்றும் சமூக வலைத்தளங்களில் கிழித்து தொங்கவிட்டு இருந்தனர். மேலும் விஜய் டிவியை புறக்கணியுங்கள் என்றும் அவர்கள் பதிவுகளை போட்டு வந்தனர். இதை சக போட்டியாளர்களாக இருந்த மகேஸ்வரி உள்ளிட்டோரும் ஆமோதித்து இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் விக்ரமன், அசீம் பற்றி தொடர்ந்து பேட்டிகளில் கூறி வருகிறார். இப்படி ஒருவர் வெற்றி பெற்றது தவறான முன்னுதாரணம் என்பதை அவரும் கூறி வருகிறார். இதை பார்த்து கடுப்பாகி இருக்கும் அசீம் தற்போது அது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர் சிலர் தோல்விகளை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர, நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம். நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல, என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் திமிர் பிடித்த தமிழன் அசீம் என்றும் அவர் ஒரு ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். மேலும் வெளியே வந்த பிறகு ஏன் பேட்டிகள் அளிப்பதில்லை என்று பலரும் அசீமிடம் கேள்விகள் கேட்டு வரும் நிலையில் வருகிற திங்கட்கிழமை முதல் தான் சேனல்களுக்கு பேட்டியளிக்க இருப்பதாகவும், விஜய் தொலைக்காட்சி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டியளிக்காமல் இருந்து வருவதாகவும், எனவே திங்கள் கிழமை வரை பொறுத்துக் கொள்ளுங்கள், மீதம் எல்லாம் வரலாறு தான் என்று மீண்டும் இன்னொரு பதிவையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து அசீமின் வெற்றியை விமர்சித்து வரும் விக்ரமனுக்கு தான் இப்படி அசீம்ம் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் அந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்..!