பிருந்தா மாஸ்டரின் அடுத்த தரமான படைப்பு.! “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” பட ட்ரைலர் வெளியானது.!

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய படமான “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” என்கிற படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே தற்போது படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. பிரபல நடன இயக்குனராக இருப்பவர் கலா மாஸ்டர், இவரின் தங்கை பிருந்தா மாஸ்டர். இவரும் ஒரு நடன கலைஞராக தமிழ் திரைப் படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிருந்தா மாஸ்டருக்கு படம் இயக்கும் ஆர்வம் வந்த காரணத்தினால் துல்கர் சல்மானை வைத்து “ஹே சினாமிகா” என்கிற படத்தை இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே பலரின் உள்ளங்களை கவர்ந்தார். இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் வெற்றி படமாக அமைந்திருந்தது. இதனால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார் பிருந்தா மாஸ்டர். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது இரண்டாவது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிருந்தா மாஸ்டரின் அடுத்த தரமான படைப்பு.! "குமரி மாவட்டத்தின் தக்ஸ்" பட ட்ரைலர் வெளியானது.! 1
“குமரி மாவட்டத்தின் தக்ஸ்” என்கிற பெயரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பின்னணியாக கொண்டு எதார்த்தமான ஒரு ஆக்ஷன் கலந்த கதையாக இது உருவாகியுள்ளது என்று ட்ரெய்லரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. ஹிந்தி நடிகர் ஹிர்ருது ஹாரூன் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சேர்ந்து நடிகர்கள் முனிஷ்காந்த், பாபி சிம்ஹா, ஆர் கே சுரேஷ், அப்பானி சரத், ரம்யா சங்கர், அனஸ்வரா ராஜன் போன்ற பலர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர். பிரியேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சாம் சி.எஸ். இசையமைப்பு செய்து இருக்கிறார். எடிட்டிங் பணிகளை பிரவீன் ஆண்டனி செய்திருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியான போதே படம் போலீஸ் மற்றும் ரவுடிகளுக்கு இடையே நடக்கும் கதை என்று தெரிந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  தெலுங்கு சினிமாவை கலக்கிய தேவாரா படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..!

பிருந்தா மாஸ்டரின் அடுத்த தரமான படைப்பு.! "குமரி மாவட்டத்தின் தக்ஸ்" பட ட்ரைலர் வெளியானது.! 3

தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலரில் சிறையில் இருந்து தப்பித்துச் செல்ல திட்டம் போடும் கைதிகளுக்கும் போலீசுக்கும் இடையே நடக்கும் கதை என்பது உறுதியாகி இருக்கிறது. சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் போலீசுக்கும் நடுவே நடக்கும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த படத்தில் இருந்து ட்ரெய்லர் வீடியோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment