விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது. இந்தத் தொடரில் நடக்கும் திருப்பங்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளது இந்த சீரியலின் ஹீரோவாக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ்குமாரும், ஹீரோயினாக பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா ஷெட்டியும், ராதிகாவாக நடிகை ரேஷ்மாவும் நடித்து வருகின்றனர். கோபி தனது பெற்றோரின் வற்புறுத்தலால் பாக்யாவை திருமணம் செய்து கொண்டு விட்டார். ஆனால் அவருடன் வாழ பிடிக்காமலேயே அவருடன் வாழ்ந்து வருகிறார் அதே சமயத்தில் தனது கல்லூரி காலத் தோழியை சந்திக்கும் ராதிகாவுடன் கோபிக்கு மீண்டும் காதல் ஏற்படுகிறது. அந்த காதலை தனது மனைவி பாக்யாவிடமிருந்து எப்படி மறைக்கிறார் என்பது பற்றியே இத்தனை காலம் நாடகம் நகர்ந்தது.

ராதிகாவும் பாக்கியாவும் ஒரு கட்டத்தில் தோழிகள் ஆகிவிட, அவர்கள் இருவரிடமிருந்து ஒருவரை ஒருவர் மறைக்க கோபி செய்த பித்தலாட்டங்கள் பார்ப்பதற்கு மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கோபி ராதிகாவின் உறவு பற்றி பாக்கியா அறிந்து கொண்டார். அன்று தொடங்கி இந்தத் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றிய காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பை கூட்டின.
தற்போது ராதிகாவின் மனதை மாற்றி, கோபி திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைத்து விட்டார். திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மண்டபத்திற்கு வரும் கோபியை பாக்கியா பார்த்து விடுகிறாரா இல்லையா? என்பது குறித்தும், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்கிற முழுமையான விவரங்களையும் தற்போது பார்க்கலாம்.
கோபி ராதிகாவின் திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அதற்காக சமையல் ஆர்டர் எடுக்க வந்திருக்கிறார் பாக்யா. அப்போது அங்கு வரும் மேனேஜர், வந்தவர்களுக்கு பாதாம் பால் அல்லது ஜூஸ் கொடுக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார். எனவே வரவேற்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து விட்டதா என்று பார்ப்பதற்காக பாக்யா பால்கனியிலிருந்து திருமண மண்டபத்தை எட்டிப் பார்க்கிறார். அப்போது மயூ அந்த இடத்தில் நிற்கிறார் அதை பாக்யா கவனிக்கவில்லை. மேலும் கோபி தயாராகிக் கொண்டிருக்கும் அறைக்கு செல்வி ஜூஸ் கொண்டு செல்கிறார். ஆனால் அங்கு வரும் உதவியாளர் தான் கோபிக்கு ஜூஸ் கொடுத்து விடுவதாக கூறி செல்வியை அனுப்பி விடுகிறார். இதனால் செல்வியும் கோபியை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேநேரம் மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஜூஸ் கொடுக்கும் வேலையை பாக்யா பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அங்கு ராதிகாவின் தாயார் நிற்பதை பாக்கியா பார்க்கவில்லை. அப்படி ஜூஸ் வழங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென அடுப்பை அணைத்து விட்டோமா என்கிற சந்தேகம் பாக்யாவிற்கு ஏற்பட, அவர் மேலே சமயலறைக்கு செல்கிறார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த மயூ, பாக்யா மீது மோதுகிறார் ய. அப்போது கூட மயூவை பாக்யா கவனிக்காமல் செல்கிறார். இப்படியாக பாக்யாவும் ராதிகா குடும்பத்தினரை சந்திக்காமலேயே காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாக்யாவின் மாமனார் ஆட்டோவில் ரிசப்ஷன் நிகழ்ச்சிக்கு மண்டபத்தை தேடி அலைகிறார்.
மேலும் செல்வி பாக்யாவிடம் மண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ள இந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் என்று கூறுகிறார். திருமணம் ஆகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்றெல்லாம் கூறுகிறார். ஆனால் அதையும் பாக்கியா கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர மயூவுக்கு தொண்டை வலி ஏற்படுகிறது. தனது பாட்டியிடம் சுடுதண்ணீர் கேட்கிறார் மயூ. அவர் மேலே சென்று சமையலறையில் வாங்கிக் கொள் என்று கூறுகிறார். சமையல் அறைக்கு செல்லும் மயூ்பாக்யா ஆன்ட்டி என்று கூற, பாக்யா அதிர்ச்சி அடைகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது. நாளை திருமண நிகழ்ச்சி நடைபெறுமா? பாக்கியா திருமணத்தை நிறுத்துவாரா? ராமமூர்த்தி என்ன செய்யப் போகிறார் என்பதெல்லாம் நாளை தெரியவரும்.