ராதிகா – கோபி திருமணத்திற்கு வரும் இனியா? இன்றைய முழு எபிசோட் விவரம்

வெளியிட்டது

நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது சூடு பிடித்துள்ளது. கோபியை திருமணம் செய்து கொள்ள ராதிகா ஒப்புதல் தெரிவித்துவிட்டார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாக்கியாவை கோபி விவாகரத்து செய்து விட்டார். பின்னர் தனது கல்லூரி கால தோழியும் காதலியுமான ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முயற்சித்து வருகிறார். ராதிகாவை அவரது தாயார் அண்ணனும் சேர்ந்து மூளைச்சலவை செய்து கோபியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துவிட்டனர். கோபி ராதிகாவின் திருமணம் ஒரு பெரிய திருமண மண்டபத்தில் உள்ள ஒரு பார்ட்டி ஹாலில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த பார்ட்டி ஹாலுக்கு சமையல் ஆர்டர் எடுத்திருப்பவர் பாக்யாதான். அங்கு ஒரு ட்விஸ்ட் நடக்க உள்ளது.

ராதிகா - கோபி திருமணத்திற்கு வரும் இனியா? இன்றைய முழு எபிசோட் விவரம் 1

ஆனால் கோபி ராதிகாவின் திருமண விஷயம் பாக்கியா வீட்டில் யாருக்கும் தெரியாது. பாக்யா திருமண மண்டபத்தில் உணவு சமைக்கும் ஆர்டர் எடுப்பதற்காக நேர்காணலுக்கு செல்கிறார். ஆனால் பாக்யாவை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை தர முடியாது என்பதால் திருமண மண்டபத்தின் உரிமையாளர் ஒரு டெஸ்ட் ஒன்றை வைக்கிறார். அதில் பாக்யாவிற்கு முதலில் பார்ட்டி ஹாலில் நடக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு சமைத்துக் கொடுங்கள். அதற்குப் பிறகு திருமண மண்டப ஆர்டர் தருகிறேன் என்று கூறுகிறார். இதற்கு பாக்யாவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் இங்கு ஒரு ட்விஸ்ட் ஆக அந்த பார்ட்டி ஹாலில் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம் தான் நடக்க இருக்கிறது. அந்த பார்ட்டி ஹாலுக்கு அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. அதேபோல் திருமண மண்டபத்தின் உரிமையாளரும் பார்ட்டி ஹாலில் சமைக்க தயாராகுமாறு பாக்யாவிடம் கூறுகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, கல்யாண பத்திரிக்கை பார்க்கிறார். பின்னர் கல்யாணத்திற்கு துணி எடுப்பது பற்றி பேசுகிறார். அப்போது இனியாவிற்கும் டிரஸ் எடுத்துக் கொடுங்கள், நானே செலக்ட் செய்து தருகிறேன் என்று ராதிகா கூறுகிறார். இதனால் கோபிக்கு மிக மகிழ்ச்சி ஆகி விடுகிறது. அடுத்ததாக இனியாவையும் திருமணத்திற்கு கூப்பிடுங்கள் என்று ராதிகா கூறுகிறார். ஆனால் இதை ராதிகாவின் தாயார் கடுமையாக எதிர்க்கிறார். கோபியை உன் கைக்குள்ளே வைத்து கொள் என்று ராதிகாவுக்கு அறிவுரை கூறுகிறார். ஏற்கனவே தனது தந்தையுடன் நல்ல நட்பில் இருக்கும் இனியா, ராதிகா கோபியின் திருமணத்திற்கு வருவாரா என்பதை வரும் நாட்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்