அந்த ஆளும் மைனாவும் வெளிய போகணும், அவர ஏத்தி விடுறது மைனா தான், ரட்சிதா கணவர் பேட்டி

ராபர்ட் மாஸ்டரும் மைனாவும் வெளியே போனால் ரட்சிதா இறுதிவரை சென்று பிக்பாஸ் டைட்டில் வெல்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக ரட்சிதாவின் கணவர் தினேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். முதல்முறையாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரட்சிதாவின் கணவர் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக பிக்பாஸ் சீசன் 6ல் விளையாடி வரும் தனது மனைவி ரட்சிதா குறித்தும், ராபர்ட் மாஸ்டர் குறித்தும் பல தகவல்களை அவர் பகிர்ந்து இருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவும் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர் ரட்சிதா. பெங்களூருவை சேர்ந்த இவர், சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அந்த ஆளும் மைனாவும் வெளிய போகணும், அவர ஏத்தி விடுறது மைனா தான், ரட்சிதா கணவர் பேட்டி 1

விளம்பரம்

தனக்கு சரியான வேலை இல்லாத காரணத்தினாலும், தன்னுடைய கோபத்தினாலும் ரட்சிதா தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் காலம் இதற்கெல்லாம் சரியான தீர்வை வழங்கும் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் தினேஷ். இந்த நிலையில் ரட்சிதாவிற்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளே சென்ற அவரிடம் ராபர்ட் மாஸ்டர் ஆரம்பம் முதலே தன்னுடைய கிரஷ் என்றும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் மூக்குத்தி என்றும் செல்லப் பெயர் வைத்தும் அழைத்து வருகிறார். மேலும் ரட்சிதாவிடம் தொடர்ந்து எல்லை மீறி சில விஷயங்களை செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர். ஒரு நாள் உச்சகட்டமாக தனக்கு முத்தம் கொடு என்றெல்லாம் கேட்க தொடங்கினார்.்இதை பார்த்த ரட்சிதாவின் கணவர் கடுப்பாகி instagram-ல் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

தொடர்புடையவை  என் புள்ள தமிழ் மேல எந்த தப்பும் இருக்காது.! தமிழை பற்றி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்ட கோதை.!

அந்த ஆளும் மைனாவும் வெளிய போகணும், அவர ஏத்தி விடுறது மைனா தான், ரட்சிதா கணவர் பேட்டி 3

விளம்பரம்

 

ஒரு பெண் சிரித்து பேசுவதாலேயே அந்தப் பெண் அனைவருக்கும் சொந்தமானவள் கிடையாது சில முட்டாள்கள் திருந்த வேண்டும் என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். ராபர்ட் மாஸ்டர் இதெல்லாம் செய்வதற்கு மைனா தான் காரணம். மைனா தான் ராபர்ட் மாஸ்டரை ஏதாவது சொல்லி ஏத்தி விடுகிறார். மைனாவும் ராபர்ட் மாஸ்டரும் வெளியே போனால் ரட்சிதா இறுதிவரை செல்வார் என்று பேசியிருக்கிறார். மேலும் அவரிடம் நீங்கள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே செல்வீர்களா? என்ற கேள்விக்கு தனக்கு தற்போது தான் நாடகங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அவ்வாறு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று அவர் பேசி இருக்கிறார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண..! Watch the Below Video.!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Cinema Vikatan

விளம்பரம்

Leave a Comment