பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி குடித்துவிட்டு நடுரோட்டில் கிடக்கிறார். எனவே பாக்யாவிற்கு ஃபோன் செய்து உங்கள் கணவர் குடித்து விட்டு கிடக்கிறார் என்று தகவல் வர அவரை மீட்டு பாக்யாவும் எழிலும் ராதிகாவின் வீட்டிற்கு கொண்டு சேர்க்கின்றனர். அங்கு ராதிகா பாக்கியாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகன் கோபி என்றைக்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாரோ அன்றையிலிருந்து அவரது நிம்மதி சுத்தமாக போய்விட்டது. கோபியின் மகள் இனியாவிற்கும் இரண்டாவது மனைவி ராதிகாவிற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்க, நடுவில் கோபி மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சண்டை தற்போது பெரிதான நிலையில் இனியா தற்கொலை முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது டிஸ்ஜார்ஜ் ஆகி வீடு திரும்பியிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இனியாவுக்கும் ராதிகாவிற்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது. இனியா டியூஷனுக்கு சென்று வீடு திரும்பும் வழியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராதிகா அவருடன் பேசக்கூடாது என்று சத்தம் போடுகிறார் மேலும் இனியாவை டியூசன் முடிந்தால் நேராக வீட்டிற்கு வரவேண்டும் என்றும் கட்டளையிடுகிறார். இதனால் கடுப்பான இனியா இதெல்லாம் கேட்க நீங்கள் யார்? என்று ராதிகாப்பிடம் கோபமாக கேட்கிறார். உடனே ராதிகா கோபியை அழைத்து நான் உங்கள் மனைவி தானே? நான் இதெல்லாம் கேட்கக்கூடாதா? என்று கேட்க கோபியும் ராதிகாவிற்கு ஆதரவாகவும் இனியாவிற்கு எதிராகவும் பேசுகிறார். இதனால் மனமுடைந்து போன இனியா மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்கிறார். தற்போது இனியா தந்தையுடன் செல்ல விருப்பம் இல்லாமல் தனது தாய் பாக்யாவுடன் வீட்டிற்கு செல்கிறார். இதனால் மனமுடைந்து போன கோபி அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு நடுரோட்டில் மட்டையாகி கிடக்கிறார்.
இது குறித்து பாக்கியாவிற்கு ஃபோன் செய்து சிலர் கூறுகின்றனர். பாக்யாவும் எழிலும் கோபியை அழைத்துச் சென்று ராதிகாவின் வீட்டில் விடுகின்றனர். அப்போது ராதிகா இவர் உங்களுக்கு யார் ஏன் நீங்கள் இவரை வீட்டிற்கு கூட்டிட்டு வந்தீர்கள் என்று கோபமாக கேட்கிறார். அதற்கு பாக்யா, இவர் எனக்கு யாரும் இல்லை, ஆனால் என் தோழியின் கணவர் ஆயிற்றே. அதனால் தான் இவரை அழைத்து வந்தேன் என்று பாக்யா பதில் கூறுகிறார். மேலும் அவர் ஓவராக குடித்திருக்கிறார். கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் ராதிகாவிற்கு அட்வைஸ் செய்கிறார்..! அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது நீங்களும் அந்த ப்ரோமோவை காண..!கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television