நடிகர் அருண் விஜய் நடித்துள்ள அச்சம் என்பது இல்லையே படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி இருக்கிறது. பிரபல நடிகராக இருக்கும் விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த மாப்பிள்ளை என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்த போதும் இவரால் பெரிய அளவிற்கு சாதிக்க முடியவில்லை. கங்கா கௌரி, இயற்கை போன்ற பல படங்களில் அவர் நடித்திருந்தார். பின்னர் அவருக்கு பாண்டவர் பூமி படம் திருப்புமுனையாக அமைந்திருந்தது. அதன் பின்னர் படங்களில் நடிக்காமல் நீண்ட இடைவெளி எடுத்த அவர் 2015 ஆம் ஆண்டு என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்து மீண்டும் திரைத்துறையில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். உடலை கட்டுக்கோப்பாக மாற்றி செம ஸ்மார்டாக மாறி இருந்த அவருக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் தடம், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக அவர் ஓமை டாக், யானை, சினம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தற்போது பார்டர், அச்சம் என்பது இல்லையே, வணங்கான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிய பின்பு அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் இவர் ஏ.எல் விஜய் உடன் இணைந்து அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன் நிமிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். லண்டனில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடித்து வருகிறார். படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகபடுத்தி மினி டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Lyca Productions