டேய் எழிலு, அமிர்தா கழுத்துல தாலி கட்டுடா.! அமிர்தாவை அழைத்து வந்து சம்பவம் செய்த பாக்கியா.!

பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது பாக்யா எழில் வர்ஷினி திருமணத்தை நிறுத்திவிட்டு எழிலுக்கும் அமிர்தாவிற்கும் திருமணம் செய்து வைப்பதற்காக அமிர்தாவை அழைத்து வருகிறார் பாக்கியா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி தொடருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது. இதில் பாக்யாவின் இளைய மகனாக இருக்கும் எழிலுக்கும் வர்ஷினிக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக திருமண மேடை வரை ஏறிய பின்பு அந்த திருமணத்தை நிறுத்துவதற்காக பாக்யலட்சுமி தற்போது முடிவெடுத்து இருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டேய் எழிலு, அமிர்தா கழுத்துல தாலி கட்டுடா.! அமிர்தாவை அழைத்து வந்து சம்பவம் செய்த பாக்கியா.! 1
25 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு அவரது கணவர் கோபி இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் பாக்யா மற்றும் பிறரும் கோபி கட்டிய வீட்டில்தான் வசித்து வருகிறார்கள். எனவே அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுங்கள், இல்லை என்றால் 70 லட்சம் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கோபி கூறுகிறார். இதனால் எழில் நான் எழுபது லட்சம் கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று தனது தந்தையிடம் சவால் விடுகிறார். ஆனால் அவரால் 70 லட்சத்தை சேர்க்க முடியவில்லை. இதற்கு இடையே எழில் சினிமா துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு கீழ் வேலை பார்த்து வருகிறார். அந்த தயாரிப்பாளரின் மகள் வர்ஷினி எழில் மீது காதல் கொள்கிறார். அதனால் 70 லட்சத்தை நான் கொடுக்கிறேன் ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று எழிலை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள துடிக்கிறார் வர்ஷினி. இதற்கு எழிலின் பாட்டியும், அண்ணன் செழியனும் துணை போகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இதுனால தான் சீரியலை விட்டு விலகிட்டேன்.! உண்மைகளை உடைத்த கண்ணே கலைமானே சீரியல் ஹீரோ

டேய் எழிலு, அமிர்தா கழுத்துல தாலி கட்டுடா.! அமிர்தாவை அழைத்து வந்து சம்பவம் செய்த பாக்கியா.! 3
ஆனால் எழில் ஏற்கனவே அமிர்தா என்கிற ஒரு விதவைப் பெண்ணை காதலித்து வருகிறார். இந்த விஷயம் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். இருந்த போதிலும் எழிலிடம் அமிர்தாவை மறந்து விடுமாறும், பணத்திற்காக வர்ஷினியை திருமணம் செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தி வர்ஷினிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து விட்டனர். பணத்திற்காக தான் எழில் இந்த கட்டாயத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதை தாமதமாக அறிந்து கொள்ளும் பாக்யா, தற்போது அமிர்தாவை கூட்டி வந்து இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எழிலிடம் கூறுகிறார். மேலும் 25 வருடங்களாக பிடிக்காமல் தன்னை கல்யாணம் செய்து கொண்ட கோபியிடம் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல, எனவே அது போல் என் பிள்ளையும் படக்கூடாது என்று பேசுகிறார். இதனால் பாக்யாவின் மாமனார் உட்பட அனைவரும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment