பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலக பலமுறை யோசித்து இருப்பதாக கோபி பேசியிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு. இந்த தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் சதீஷ். இவரை சதீஷ் என்று கூறுவதை விட கோபி என்று கூறினால் தான் பலருக்கும் தெரியும். கோபியின் ஆரம்பகால வாழ்க்கை மிகவும் கசப்பானது. ஐந்து வயதில் ஒரு விபத்தில் தாய், தந்தை, தம்பி என பலரையும் இழந்த பிறகு சென்னைக்கு இரண்டு டவுசர் இரண்டு சட்டைகளை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அங்கு அவர் தனது அத்தை வீட்டிலேயே தங்கி வளர்ந்துள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து அவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் டிவி, விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் அவர் நடித்துள்ளார். இதை அவரே ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு பாக்கியலட்சுமி எனும் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கோபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் குடும்ப கதையாக ஆரம்பித்து தற்போது வழக்கமான இரண்டு மனைவி கதையாக மாறிவிட்டது பாக்கியலட்சுமி. இந்த இரண்டாவது கள்ளக்காதலை கோபியின் மனைவி பாக்கியலட்சுமி கண்டுபிடித்து, கோபியிடம் இருந்து விவாகரத்தும் பெற்று விட்டார். அதுதான் கதையின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம். தற்போது பாக்யாவை வீட்டிலிருந்து வெளியேற்றும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார் கோபி. இதனால் பாக்கியலட்சுமி ரசிகர்கள் கோபியை வசை பாடுவது உண்டு. கோபியை வசைபாடினால் பரவாயில்லை, கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சதீஷை திட்டி தீர்த்து வருகின்றனர்.

சதீஷின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக செய்தி அனுப்புவது, கீழ்த்தரமான வார்த்தைகளில் திட்டுவது என்று சதீஷுக்கு மிகுந்த மன அழுத்தம் கொடுத்துள்ளனர். பல பேட்டிகளில் இது பற்றி கூறியிருக்கிறார். ஏற்கனவே தான் ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்ததாகவும், அதில் பலரும் தன்னை மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்ததால் அந்த அக்கவுண்ட் டெலிட் செய்து விட்டதாகவும் கூறியிருந்தார். தற்போது மீண்டும் புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், அடுத்த ஐந்து நாட்கள் பாக்கியலட்சுமி சீரியல் மிக மோசமாக போகும். தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதை நான் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். எனக்குத் தெரியும் இது நடிப்புதான். ஆனால் சிலர் என்னை மிக மோசமான வார்த்தைகளில் திட்டுகிறீர்கள். பலர் எனக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுகிறீர்கள். திட்டினால் திட்டட்டும் அது உங்களுக்கு விருது மாதிரி என்று கூறுகிறீர்கள். எனக்கே சில சமயங்களில் இந்த சீரியலை விட்டு விலகிவிடலாம் என்று தோன்றுகிறது. விலகிவிட்டு வேறு நன்கு பாசிட்டிவான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதாலேயே பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இது நாடகம் தான், நாடகத்தை நாடகமாக பாருங்கள் தன்னை திட்டாதீர்கள் என்று சதீஷ் பலமுறை கூறியும் அவரை திட்டும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவரின் வீடியோவை நீங்களும் காண..Watch the below Video..
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7