‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் போலீசை அழைத்துக் கொண்டு பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். ஆனால் அந்த போலீஸோ விசாரிக்காமல் பாக்யாவின் காபிக்கு மயங்கி பாக்யாவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனால் கணேஷ் கடுப்பாகி நின்று கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது கதைப்படி எழிலின் மனைவியாக இருக்கும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்து விட்டதாக பலரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மீண்டும் உயிருடன் வந்துவிடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாக்கியலட்சுமி’ தொடரில் தற்போது அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷின் வருகை தேவையற்ற ஒன்றாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது் இறந்து போன ஒருவர் எப்படி மீண்டும் உயிருடன் வர முடியும் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து இருக்கிறது. எனினும் கதையை சுவாரசியமாக்குவதற்காக இயக்குனர் எவ்வாறு செய்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் கணேஷ் தற்போது தனது மனைவி அமிர்தாவையும் அவர் திருமணம் செய்து கொண்டுள்ள எழிலையும் பிரித்து விட திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் தொடர்ந்து பாக்யாவின் வீட்டிற்கு சென்று குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் போலீசை அழைத்துக் கொண்டு வருகிறார் கணேஷ்.
ஆனால் வீட்டிற்கு வந்த போலீஸ் பாக்யாவின் கையால் காபி வாங்கி குடித்துவிட்டு காபி நன்றாக இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறார். இதை எல்லாம் பார்க்கும் கணேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக் கொள்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television