18 லட்சத்தை பிரட்ட முடியாமல் தவிக்கும் பாக்யா.! பாக்கியாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் கோபி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. கோபி கட்டிய வீட்டை தான் பணம் கொடுத்து வாங்கிக் கொள்வதாக பாக்கியா தற்போது கோபியிடம் சவால் விட்டிருக்கிறார். அந்த சவாலில் பாக்யா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தனது மூத்த மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார் கோபி. தற்போது ராதிகாவுடன் தனது மூத்த மனைவி பாக்யாவின் வீட்டிலேயே வந்து வசித்து வருகிறார். இது நாளுக்கு நாள் பிரச்சனையை பெரிதாகிக் கொண்டே போகிறது. பாக்கியா, கோபி, ராதிகா, ஈஸ்வரி என தினமும் ஏதாவது ஒரு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. கோபி மற்றும் ராதிகாவை வீட்டில் இருந்து வெளியேறுமாறு ஈஸ்வரி மற்றும் பாக்யா இருவரும் கூற, இது தான் கட்டிய வீடு இதிலிருந்து வெளியேறப் போவதில்லை என்று கோபி பாக்யாவிடம் திமிராக பேசுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

18 லட்சத்தை பிரட்ட முடியாமல் தவிக்கும் பாக்யா.! பாக்கியாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் கோபி..! 1

விளம்பரம்

கோபி தனது சொந்த முயற்சியால் 40 லட்ச ரூபாய் செலவழித்து அந்த வீட்டை கட்டியிருந்தார். இதில் 18 லட்சம் ரூபாய் மட்டுமே பாக்கி இருக்கிறது. மீதமுள்ள அனைத்து பணத்தையும் பாக்கியா கோபிக்கு கொடுத்துவிட்டார். இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் மீதம் உள்ள பணத்தையும் கொடுத்து விடுவேன் என்று கோபியிடம் சவால் விட்டு இருக்கிறார். ஆனால் எப்படி 18 லட்சம் ரூபாயை எடுப்பது என்று பாக்கியாவிற்கு தெரியவில்லை. அந்த சமயத்தில் அவரது நண்பர் பழனிச்சாமியின் உதவியில், ஒரு பெரிய திருமண ஆர்டர் கிடைக்கிறது. அந்த திருமண ஆர்டர்களை தற்போது சமைத்து முடித்து அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டி இருக்கிறார் பாக்யா. அவருக்கு அதில் எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கிறது. மீதம் 10 லட்ச ரூபாய் அவருக்கு கிடைக்கவில்லை, இதனால் சமையலறையில் அமர்ந்து பாக்கியா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபி நீ விட்ட சவாலை நிறைவேற்ற இன்னும் இரண்டு நாட்களில் மீதி இருக்கிறது என்று பாக்யாவிடம் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  பாராட்டு மட்டும் உனக்கு..! தப்பு செஞ்சா மட்டும் பழி எனக்கா..! கோபியை வெளுத்தெடுத்த பாக்கியா..!

18 லட்சத்தை பிரட்ட முடியாமல் தவிக்கும் பாக்யா.! பாக்கியாவை பயங்கரமாக அசிங்கப்படுத்தும் கோபி..! 3
அப்போது அங்கு வரும் கோபியின் தந்தை ராமமூர்த்தி இன்னும் இரண்டு நாட்களில் 18 லட்ச ரூபாய் பணத்தை உன் முகத்தில் வீசி எறிய தான் போகிறாள் பாக்யா என்று சொல்லி கோபியுடன் சண்டை போடுகிறார். இதனால் பாக்கியா மீதம் 10 லட்ச ரூபாய்க்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன நடக்கும்? பாக்கியா ஒரு வேலை பணத்தை ரெடி செய்து விட்டால் கோபியும் ராதிகாவும் என்ன செய்வார்கள்? வீட்டை விட்டே வெளியேறுவார்களா என்பதெல்லாம் அடுத்த விறுவிறுப்பான கட்டங்களில் தெரியவரும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment