பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது பாக்யாவை போலீசில் பிடித்துக் கொடுக்க போவதாக சமையல் கான்ட்ராக்ட் கொடுத்தவர்கள் தற்போது சண்டை செய்கின்றனர். இதனால் இன்று எபிசோடு மிக பரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. தமிழ் சின்னத்திரை உலகில் மிகப் பிரபலமான சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். அதில் இன்றைய எபிசோடில் பள்ளியில் முதல் மாணவியாக வந்திருக்கும் இனியாவை பள்ளிக்கு வரச் சொல்லி இருக்கின்றனர். இதனால் எழில், ராமமூர்த்தி, செழியன், ஜெனி, இனியா என அனைவரும் பள்ளிக்கு கிளம்பி காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது மறுபுறம் கோபியும், ராதிகாவும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.!

அப்போது ராதிகாவிடம் கோபி இனியாவின் மதிப்பெண்கள் பற்றி குழம்பிக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த ராதிகா நீங்கள் இப்படி புலம்பி கொண்டிருப்பதற்கு இனியாவிடமே போன் செய்து கேட்கலாம் என்று கூறுகிறார். பிறகு இனியாவுக்கு போன் செய்து பேசும் கோபி அவர் 596 மார்க் வாங்கி பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த செய்தி கேட்டு கோபி ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். மேலும் இனியாவை பார்க்க வீட்டிற்கு வருவதாக கோபி கூறுகிறார். அப்போது தான் பள்ளிக்கு கிளம்பி சென்று கொண்டிருப்பதாக இனியா சொல்ல, நானும் பள்ளிக்கு வருகிறேன் என்று சொல்லி மகிழ்ச்சியாக ராதிகாவும் கோபியும் இனியாவின் பள்ளிக்கு கிளம்பி செல்கின்றனர்.
அங்கு இனியாவை ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் மலர் தூவி வரவேற்று இருக்கின்றனர். மேலும் அங்கு வரும் கோபி இனியாவை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். மேலும் மற்ற பெற்றோர்களிடமும் இது என்னுடைய மகள் இனியா என்று அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ராதிகா இனியாவிடம் மகிழ்ச்சியாக வாழ்த்துக்களை கூற இனியும் ராதிகாவிற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க சமைக்க வந்த பாக்யாவிற்கு மற்றொருபுறம் பிரச்சனை எழுந்து இருக்கிறது.
இனியாவின் மதிப்பெண்கள் குறித்து தெரிந்து கொள்வதற்காக சமையலில் ஒழுங்காக கவனம் செலுத்தாமல் இருக்கிறார் பாக்யா. மேலும் செல்வியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு இவர் போனை கைகளில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். இதை ஏற்கனவே கவனித்த பெண்ணின் மாமா பாக்யாவை ஒழுங்காக சமைக்குமாறு கூறுகிறார். ஆனால் செல்வியோ பாயசத்தை தீய விட்டு விட்டார். இதனால் மாப்பிள்ளை குடும்பத்தாருக்கும் பெண் குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எழுகிறது. மாப்பிள்ளை குடும்பத்தார் சமையலை சொதப்பி தங்களை அவமானப்படுத்தி விட்டதாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது உள்ளே வரும் பாக்யா அனைவரிடமும் கையெடுத்து மன்னிப்பு கேட்கிறார்.மேலும் தன் மீதுதான் தவறு, சமைக்க வந்த நான் செய்த தவறுக்காக, இந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார் பாக்யா. ஆனால் மாப்பிள்ளை விட்டாரோ நீ யாருமா இதெல்லாம் பேச? நீ பேசாமல் ஒரு மூலியில் போய் நில்லு என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர். மேலும் தங்களை அவமானப்படுத்தியதற்காக இந்த திருமணத்தை நிறுத்தப் போவதாகவும் பெண் வீட்டாரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் அங்கு வரும் பெண்ணின் தாய் மாமா ஆரம்பத்தில் இருந்து நீங்கள் செல்பி எடுக்க தான் குறியாக இருந்தீர்கள், இந்த திருமணம் மட்டும் நின்று விடட்டும், உங்களை போலீசில் புகார் கொடுத்து கைது வைக்க செய்வேன் என்று சொல்லி பாக்யா மற்றும் அவருடன் சமைக்க வந்த அனைவரையும் ஒரு அறையில் உட்கார வைக்கிறார். இதனால் பாக்யா மற்றும் செல்வி என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்து என்ன நடக்கும் பாக்யாவை எதிர்பார்த்திருக்கும் இனியா எப்படி இதை எதிர்கொள்ளப் போகிறார் என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Watch the Below Video.!
YouTube Video Embed Code Credits: Vijay Television