பாக்கியவை புகழ்ந்து பேசி கொண்டிருந்த கோபி.! மண்ணாங்கட்டி என திட்டிய ராதிகா.! இன்றைய ப்ரோமோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்யாவை பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார் கோபி. இதனால் கடுப்பான ராதிகா,கோபியை திட்டிவிட்டு எழுந்து செல்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்கு தற்போது ஐடி கம்பெனி கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. அதே கம்பெனியில் ராதிகா வேலை பார்த்து வருகிறார். பாக்யா கணவரான கோபியின் இரண்டாவது மனைவிதான் ராதிகா. முதல் மனைவி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு தற்போது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வசித்து வருகிறார் கோபி. பாக்யா கேன்டீன் காண்ட்ராக்டை எடுப்பதில் ராதிகாவிற்கு துளியும் விருப்பமில்லை. எப்படியாவது இந்த காண்ட்ராக்டை கெடுத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. ஏற்கனவே ஒருமுறை இந்த காண்ட்ராக்டை எடுக்க வந்த பாக்யா பற்றி அந்த கம்பெனியின் முதலாளியிடம் தவறு தவறாக சொல்லிக் கொடுத்து கான்ட்ராக்ட் கிடைக்க விடாமல் செய்துவிட்டார் ராதிகா. அதேபோல் இப்பொழுதும் செய்ய முயற்சிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியவை புகழ்ந்து பேசி கொண்டிருந்த கோபி.! மண்ணாங்கட்டி என திட்டிய ராதிகா.! இன்றைய ப்ரோமோ.! 1

 

நேர் காணலுக்கு வரும் பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகள் கேட்டு தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறார் ராதிகா. மேலும் இதே கம்பெனியில்தான் நான் வேலை பார்க்க போகிறேன் நீங்கள் எப்படி கான்ட்ராக்ட் எடுப்பீர்கள் என்று நானும் பார்க்கிறேன் என்று சொல்லி பாக்யாவை மிகவும் சங்கடப் படுத்துகிறார். ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத பாக்யா வெற்றிகரமாக கான்ட்ராக்ட்டை பிடித்து விட்டார். இதை வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார் பாக்யா. மேலும் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்காக வகுப்புகளில் சேரவும் அவர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இதை அவரது மகன் எழிலிடம் அவர் இன்று கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம் பாக்யா கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்ததை துளியும் விரும்பாத ராதிகா செம கடுப்பில் இருக்கிறார். அவர் வேலை கூட பார்க்காமல் இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து கோபி வீட்டிற்கு வருகிறார். சோகமாக அமர்ந்திருக்கும் ராதிகாவிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார்.

அப்போது பாக்கியா கேன்டீன் காண்ட்ராக்டை பிடித்து விட்ட விஷயத்தை கோபியிடம் கூறுகிறார். மேலும் இனிமேல் நான் தினமும் அவள் சமைக்கும் சமையலை தான் சாப்பிட வேண்டுமா என்றும் கோபமாக கேட்கிறார். இதை இந்த விஷயத்தை தெரிந்த பின்னர் கோபி சந்தோஷப்படும் விதமாக அந்த வீட்டில் இருந்தபோது பூனை போல் இருப்பார், காபியை கொண்டு வந்து குடிக்கிறீர்களா என்று கேட்பார், ஆனால் அவளுக்குள்ளும் இப்படி ஒரு திறமை இருக்கிறது, கேன்டீன் காண்ட்ராக்டை பிடிக்கும் அளவிற்கு அவருக்குள்ளும் திறமை இருக்கிறது என்று பாக்யாவை பாராட்டி பேசத் தொடங்குகிறார். இதை பார்த்துக் கொண்டிருந்த ராதிகா பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கோபமாக எழுந்து “மண்ணாங்கட்டி” என்று கோபியை திட்டி விட்டு செல்கிறார். இதனால் கோபி மாட்டிக் கொண்டு முடித்துக் கொண்டிருக்கிறார். காமெடியாக இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்