பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி தாத்தா ஆகியிருக்கிறார். அந்த புரோமோவை தற்போது விஜய் டிவியை வெளியிட்டு இருக்கிறது. குடும்பப் பாங்கான தொடர்களை எடுப்பதில் முன்னிலை வகிக்கிறது விஜய் டிவி. அந்த வகையில் குடும்பத்தின் அருமையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. முதல் மனைவி பாக்யாவை பிரிந்து இரண்டாவதாக தனது தோழி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார் கதாநாயகன் கோபி.

தற்போது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் அவர் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார். ராதிகாவிற்கு சமைக்க தெரியாது. மேலும் ஒரு காபி கூட போட்டுக் கொடுப்பதில்லை. இதனால் கோபிக்கு பல இடங்களில் நெருக்கடிகள் ஏற்படுகிறது. நேற்று மயூவின் தந்தையாக பள்ளிக்குச் சென்ற கோபிக்கு பல அவமானங்கள் நடந்தது. பள்ளியில் இருந்த மகள் இனியாவை பார்த்தவுடன் கோபி அவரிடம் சென்று பேசியது ராதிகாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் ராதிகா கோபத்தில் கோபியிடம் கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனி கர்ப்பமாக இருக்கிறார்.
கோபியும் ராதிகாவும் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, கோபியின் தந்தை ராமமூர்த்தி கோபியை நான் பார்த்து நீ தாத்தா ஆயிட்ட, தாத்தா ஆயிட்ட என்று கிண்டல் அடிக்கும் விதமாக கத்துகிறார். இதனால் கோபி மகிழ்ச்சியடைகிறார். ஆனால் ராதிகாவோ செம கடுப்பில் இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television