பாக்கியலெட்சுமி சீரியலில் கோபியின் மூத்த மகனின் மனைவி ஜெனிக்கு குழந்தை உருவாகி உள்ளது. அவர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கோபியின் அப்பா ராதிகா வீட்டிற்கே வந்து கூறுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடர் தான் பாக்கியலட்சுமி சீரியல். இந்த தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. தற்போது கோபியின் மூத்த மகன் செழியனின் மனைவி ஜெனி கர்ப்பமாக இருக்கிறார். இதனால் கோபி தாத்தாவாகி இருக்கிறார். இந்த நிலையில் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் கோபியின் அப்பா, கோபியை “தாத்தா தாத்தா” எனச் சொல்லி மரணமாக கலாய்த்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இன்றைய ப்ரோமோவில் ஜெனி செழியனிடம் தனக்கு காலை முதல் வாந்தி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பாக்யா ஜெனி கர்ப்பமாக இருக்கலாம் என்று மாமியார் ஈஸ்வரி இடம் பேசிக் கொண்டிருந்தபோது, எதுவானாலும் மருத்தவரிடம் காண்பித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார். உடனே பாக்யா, செழியன் மற்றும் ஜெனி மூவரும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வருகின்றனர். ஜெனி இரண்டு மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இதனால் ஸ்வீட் வாங்கிக் கொண்டு நேராக கோபியின் அப்பா ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவும் கோபியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ராமமூர்த்தி கோபியிடம் கூறுகிறார்.

மேலும் கோபியை பார்த்து நீ தாத்தா ஆயிட்டடா தாத்தா தாத்தா என்று திருப்பி அந்த வார்த்தையை கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபி ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், ராதிகாவை நினைத்து வேதனை அடைகிறார். மேலும் செழியினை சந்தித்து நீ நேற்று பிறந்தது போலிருக்கிறது தற்போது உனக்கும் ஒரு குழந்தை பிறக்க இருக்கிறது என்று கோபி மகிழ்ச்சியாக பேசுகிறார் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television