“கோமதியிடம் மன்னிப்பு கேட்ட பாக்யா.!” ‘பாக்கியலட்சுமி’ – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகா சங்கமம் ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 2’ ஆகிய தொடர்களில் மகா சங்கமம் நடக்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரு சீரியல்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த இரண்டு சீரியல்களையும் ஒரு இயக்குனர் இயக்கி வருவதால் அடிக்கடி இந்த இரண்டு சீரியல்களையும் இணைத்து “மகா சங்கமம்” வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"கோமதியிடம் மன்னிப்பு கேட்ட பாக்யா.!" 'பாக்கியலட்சுமி' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மகா சங்கமம் ப்ரோமோ இதோ.! 1
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 எடுக்கப்பட்டபோது இதுபோல அடிக்கடி மகா சங்கமங்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடங்கி சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடக்க இருக்கிறது. திருமண விழா ஒன்றின்க்காக ‘பாக்கியலட்சுமி’ குடும்பம் வேனில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கதாநாயகியாக இருக்கும் கோமதி மீது பாக்கியலட்சுமி வந்து கொண்டிருக்கின்ற வேன் மோத வருகிறது. இதனால் சண்டை ஏற்படுகிறது. அப்போது வேனில் இருந்து இறங்கி பாக்யா கோமதியிடம் மன்னிப்பு கேட்கிறார்.


பின்னர் இந்த இரண்டு குடும்பங்களும் ஒரே அறையில் ஹோட்டல் எடுத்து தங்குகின்றனர். அப்போது மீண்டும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் கதிருக்கும், எழிலுக்கும் மோதல் ஏற்படுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்