கோபியை நிற்க வைத்து கிழிக்கும் ராதிகா..! அசராமல் கிழி வாங்கும் கோபி ..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபியை நிற்க வைத்து கிழிக்கும் ராதிகா..! அசராமல் கிழி வாங்கும் கோபி ..! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ..! 1

தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், வீட்டிற்கு வரும் கோபியிடம் ராதிகா கடுமையாக நடந்து கொள்கிறார். கோபியிடம் , உங்களுக்கு என்னை பற்றியும் என் மகள் பற்றியும் அக்கறை இல்லை என்பதை போல கடுமையாக சண்டையிடுகிறார். இதனை கேட்ட கோபி அமைதியாக நின்று திட்டு வாங்கி வருகிறார் . இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள், கோபி ராதிகாவை எதிர்த்து எதுவும் பேசாததால் கடுப்பாகி அவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த சண்டை இருவருக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை உருவாக்கும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்