Avengers Dooms Day படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ்..! வெளியான மிகப்பெரிய தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இவரின் 50வது படமான ராயன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்க உள்ளார் தனுஷ்.

Avengers Dooms Day படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ்..! வெளியான மிகப்பெரிய தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இந்நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஹாலிவுட் படம் என்றால் அவெஞ்சர்ஸ் தான். தற்போது Avengers Dooms Day படத்தின் மூலம் அயர்ன் மேன் ஆக நடித்த ராபர்ட் மீண்டும் வில்லனாக நடிக்க உள்ளார் . அண்மையில் இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில் , இப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Avengers Dooms Day படத்தில் நடிக்க இருக்கும் தனுஷ்..! வெளியான மிகப்பெரிய தகவல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இப்படத்தின் இயக்குனர் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவான கிரேமேன் படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கான நிகழ்ச்சியில் ரூசோ பிரதர்ஸ் உடன் கலந்துகொண்ட தனுஷ், அவெஞ்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து இருந்தார். இதனால் இவர் இப்படத்தில் நடிக்கலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது .

விளம்பரம்

Leave a Comment