பாராட்டு மட்டும் உனக்கு..! தப்பு செஞ்சா மட்டும் பழி எனக்கா..! கோபியை வெளுத்தெடுத்த பாக்கியா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. பல குடும்ப வாழ்க்கையுடன் நாயகி பாக்கியா கதை ஒத்துப்போவதால் இந்த தொடருக்கு குடும்ப தலைவிகள் பலரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாராட்டு மட்டும் உனக்கு..! தப்பு செஞ்சா மட்டும் பழி எனக்கா..! கோபியை வெளுத்தெடுத்த பாக்கியா..! 1

தொடரின் சுவாரசியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது இனியா வீட்டிற்கு தெரியாமல் பப்பிற்கு சென்று போலீசில் மாட்டி கொள்கிறார். அவரை ராதிகா மீட்டு காப்பாத்தி அழைத்து வருகிறார். இதுகுறித்து கேள்வி பட்டதும் கொதித்து எழும் கோபி, பாக்கியா வீட்டிற்கு வந்து இனியாவை அழைத்து செல்ல வருகிறார். மேலும் பாக்கியாவிற்கு மகளை சரியாக வளர்க்க தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டுகிறார்.

இதனால் கடுப்பாகிய பாக்கியா, கோபியை பார்த்து மகள் படிப்பில் வெற்றிபெற்றால் பாராட்டு மட்டும் உங்களுக்கு, தவறு செய்தால் பலி என் மீதா என கேள்விகளால் வறுத்தெடுக்கிறார். அவருடன் ஈஸ்வரியும் சேர்ந்துகொண்டு கோபியை கிழித்தெடுக்கவே அவர் அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்