Categories: சினிமா

உங்க பொண்ணை எங்க காலேஜ்ல சேர்க்கமாட்டோம்..! கல்லூரி முதல்வரிடம் கதறி அழுத பாக்கியா..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல குடும்ப தலைவிகளையும் ரசிகர்களாக கொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது இந்த தொடர். நாளுக்கு நாள் தொடரின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறார் இயக்குனர் எனலாம். சுவாரஸ்யமாக கதையை கொண்டு செல்வதால், தொடரின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

உங்க பொண்ணை எங்க காலேஜ்ல சேர்க்கமாட்டோம்..! கல்லூரி முதல்வரிடம் கதறி அழுத பாக்கியா..! 1

தற்போது இனியா வீட்டிற்கு தெரியாமல் பப்பிற்கு சென்று போலீசில் மாட்டிக்கொள்கிறார். அங்கு சரியான நேரத்தில் வந்த ராதிகா அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதுபற்றி கேள்வி பட்ட பாக்கியா பெரும் அதிர்ச்சி அடைகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இனியா போலீசில் மாட்டியது கல்லூரிக்கு தெரிந்ததால், அவரை சேர்க்க மாட்டேன் என கல்லூரி முதல்வர் கூறுகிறார்.

இதனால் இனியா பாக்கியாவை அழைத்து வரவே, பாக்கியா கல்லூரி முதல்வரிடம் கெஞ்சி அழுகிறார். மேலும் ஈஸ்வரி கோபி இன்னொரு கல்யாணம் செய்துவிட்டு சென்றதை கூறுகிறார். இதனை கேட்டு கடுப்பாகிய கோபி, கல்லூரியில் என்னை பற்றி ஏன் பேசுனீர்கள் என கூறுகிறார். மேலும் ஈஸ்வரியிடம் இனியா என் மகள் இல்லை என சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என கூறுகிறார்.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்