மண்டபத்துக்கு வந்த கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்.! இன்றைய முழு எபிசோட் விவரம்

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. கோபியின் கள்ளக்காதலை பற்றி அறிந்து கொள்ளும் பாக்கியா கோபிக்கு விவாகரத்து அளித்துவிட்டு வீட்டை விட்டு துரத்தி விட்டார். மேலும் இந்த வீட்டை கட்ட செலவான நாற்பது லட்சம் பணத்தையும் கோபிக்கு திருப்பி தருவதாகவும் பாக்கியா வாக்கு கொடுத்துவிட்டார். கோபியும், ராதிகாவின் வீட்டிற்கு சென்று எப்படியோ ராதிகாவின் மனதை மாற்றி அவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து விட்டார். தற்போது திருமண ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. தன் கணவரிடம் போட்ட சபதத்தை நிறைவேற்றுவதற்காக பாக்கியா சமையல் ஆர்டர் ஒன்றை எடுத்து செய்து வருகிறார். ஆனால் பாக்யாவிற்கு தான் கோபி திருமணத்திற்கு தான் சமைக்கிறோம் என்பதை தெரியாது.

மண்டபத்துக்கு வந்த கோபி ராதிகா..பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்.! இன்றைய முழு எபிசோட் விவரம் 1

அதேபோல கோபிக்கும் தனது திருமணத்திற்கு சமைப்பது பாக்யா தான் என்பது தெரியாது. இந்த நிலையில் இன்றைய எபிசோடின் முழு விவரத்தை நாம் பார்க்கலாம். திருமண மண்டபத்தில் வைத்து பாக்கியா சமையல் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அவருக்கு உதவியாக செல்வி மற்றும் பெண்கள் சமைத்து வருகின்றனர். அப்போது செல்வி வெளியில் இருக்கும் பெயர் பலகையை பார்க்கிறார். அதில் ஆங்கிலத்தில் இருக்கும் மணமகன் கோபிநாத் என்கிற பெயரை படித்து விட்டார். அவர் கீழே இருக்கும் ராதிகா என்கிற பெயரை படிப்பதற்குள் அந்த சமையல் ஆர்டர் கொடுத்த மேனேஜர் வந்து செல்வியை உள்ளே போய் சமைக்குமாறு துரத்தி விடுகிறார். செல்வியும் ராதிகாவின் பெயரை முழுமையாக படிக்காமலே மீண்டும் சமைக்க சென்று விடுகிறார்.

உள்ளே சென்ற செல்வி பாக்யாவுடன் இணைந்து சமைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி மற்றும் ராதிகா குடும்பத்துடன் வந்து இறங்குகின்றனர். அங்கு ராதிகாவின் அண்ணன் மனைவியும் வந்து சேர்கிறார். அனைவரும் மண்டபத்திற்கு உள்ளே செல்கின்றனர். அப்போது பாக்யாவிடம் செல்வி அப்பளக் கட்டு வரவில்லை என்று கூறுகிறார். இதனால் மளிகை கடைக்கு போன் செய்து அப்பளத்தை அனுப்பி வைக்குமாறு பாக்யா போனில் பேசத் தொடங்குகிறார். போன் சரியாக கேட்காததால் பால்கனியில் வந்து கத்தி கத்தி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் கோபி பாக்கியாவின் குரலை கேட்டு விடுகிறார். அவர. பாக்யாவின் குரலை தெரிந்து கொண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டு நிற்கிறார். எங்கு சென்றாலும் பாக்யாவின் குரலே கேட்பதாக அவர் கோபம் அடைகிறார். ஆனால் இதை மேலிருந்து போன் பேசிக் கொண்டிருக்கும் பாக்யா கவனிக்கவில்லை.

இந்த சமயத்தில் கோபியிடம் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று சபதம் போட்டு வீட்டில் இருந்து கிளம்பி இருக்கிறார் தாத்தா ராமமூர்த்தி. இதனால் சோகத்தில் இருக்கிறார் ஈஸ்வரி. இதை இனியாவும், எழிலும் கவனித்து விடுகின்றனர். பாக்யா கோபியை சந்திப்பாரா? அதற்குள் ராமமூர்த்தி தாத்தா மண்டபத்திற்கு வந்து திருமணத்தை நிறுத்துவாரா? தான் உயிருடன் இருக்கும் வரை இந்த திருமணம் நடைபெறாது என்று சபதம் போட்ட தாத்தா திருமணத்தை நிறுத்த என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. சீரியல் டீம் அதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளனர்.இந்த ட்விஸ்ட்டுகள் எல்லாம் வரும் வாரத்தில் அவிழத் தொடங்கும். என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்