பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியை அறிவித்தது விஜய் டிவி.! எப்போன்னு பாருங்க.!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியை அறிவித்துள்ளது விஜய் டிவி. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்காத ஆட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகப் பிரபலம். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மொத்தம் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. இது மேலை நாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் என்னும் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியை அறிவித்தது விஜய் டிவி.! எப்போன்னு பாருங்க.! 1

விளம்பரம்

தமிழில் மொத்தம் ஐந்து சீசன்களையுமே கமலஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். மேலும் ஓடிடி தளத்தில் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் பாதி நாட்கள் தொகுத்து வழங்கினார். பின்னர் விக்ரம் பட சூட்டிங் இருப்பதால் அவர் பாதியில் விலகினார். பின்னர் அந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கி வந்தார். இதனால் பிக் பாஸ் சீசன் 6-ஐ யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அதை கமலஹாசனை தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்படும் என்ற ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

தொடர்புடையவை  ரசிகர்களை ஏமாற்றிய தி க்ரே மேன்..ட்ரைலரில் தனுஷை தேட வேண்டியதா இருக்கு | The Gray Man

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் தேதியை அறிவித்தது விஜய் டிவி.! எப்போன்னு பாருங்க.! 3

விளம்பரம்

இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் ரக்ஷன், தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, தொகுப்பாளர் டிடி, ஜிபி முத்து, காமெடி நடிகர் மதுரை முத்து, கிரண், அஜ்மல் அமீர், ஆயிஷா, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா போன்றவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருக்கிறது. விரைவில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள் என்பது தெரியவரும். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment