சுயமரியாதை இல்லாம இந்த ஆளு கூட வாழ முடியாது.! நீதிபதியிடம் மாஸ் காட்டிய பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி மற்றும் ராதிகாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் கதாநாயகனாக வரும் கோபி, தனது மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, கல்லூரி கால தோழியான ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கதை நகர்ந்து வருகிறது. இந்த சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பை எட்டி இருப்பதற்கான காரணம் பாக்யா, கோபியின் கள்ளக்காதலை பற்றி தெரிந்து கொண்டதுதான். இதன் பின்னர் இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டு, பாக்யா கோபியை வெளுத்து வாங்குவது போன்ற காட்சிகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி சென்று கொண்டுள்ளது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சுயமரியாதை இல்லாம இந்த ஆளு கூட வாழ முடியாது.! நீதிபதியிடம் மாஸ் காட்டிய பாக்கியா 1

விளம்பரம்

கோபியின் கள்ளக்காதலை பற்றிய தெரிந்த பாக்யா சமாதானம் ஆகி வீட்டிற்கு வந்து விட்டார் என்று வீட்டில் உள்ள அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பாக்கியா கோபிக்கு விவாகரத்து கொடுப்பதற்காகவே வந்திருக்கிறார். குளித்து முடித்து, கிளம்பி ரெடி ஆகி, கோவிலுக்கு செல்வது போல் வந்து நிற்கும் பாக்யா, தனது குடும்பத்தாரிடம் கோர்ட்டில் இருந்து விவாகரத்து பத்திரம் வந்துள்ளதால் கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக கூறுகிறார். பின்னர் கோபியை அனைவர் முன்னிலையில் வைத்து உங்களுக்கு பிடிக்காத மனைவியை இவ்வளவு நாள் வாழ்ந்ததை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது என்றும், எனக்கு தெரியாமலே என்னிடமிருந்து விவாகரத்து பெற நினைத்த உங்களுக்கு, நானே முன்வந்து விவாகரத்து கொடுக்கிறேன். வந்து நீதிமன்றத்தில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று விவாகரத்து பெறுவதற்காக கோபியை அழைக்கிறார்.

தொடர்புடையவை  பாக்யாவிடம் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு போக சொன்ன கோபி.! பாக்யா செய்த செயல்.!

சுயமரியாதை இல்லாம இந்த ஆளு கூட வாழ முடியாது.! நீதிபதியிடம் மாஸ் காட்டிய பாக்கியா 3

விளம்பரம்

இதைப் பார்த்து கோபியின் குடும்பத்தார் பாக்யாவை எப்படியாவது சமாதானம் செய்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் அழைத்து வருமாறு என்று கூறுகின்றனர். ஆனால் எனக்கே டைவர்ஸ் தருகிறேன் என்று திமிராக பேசும் பாக்யாவிற்கு நான் விவாகரத்து கொடுக்க தான் போகிறேன் என்று பதிலுக்கு விடாப்பிடியாக பேசுகிறார் கோபி. தற்போது இருவரும் கோர்ட்டுக்கு செல்கின்றனர். நீதிபதியிடம் எங்கு சுயமரியாதை இல்லாமல் இவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூற நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment