இன்ஸ்டாகிராமில் ரன்வீர் சிங், விஷ்ணு விஷாலை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சரத் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பலரும் அவருக்கு கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அவர் மீது வழக்கு தொடுக்கப் போவதாக சிலர் அறிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சரத். இவர் பிரபல திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்திரன் போலவே காமெடி நிகழ்ச்சிகளில் மொட்டை அடித்துக் கொண்டு கலந்து கொள்வார். குரலும் அப்படியே அவரைப் போலவே இருந்ததால் இவரை சின்னத்திரை மொட்டை ராஜேந்திரன் என்று கூறுவது உண்டு. காமெடியில் கலக்கி வந்த இவர் குக் வித் கோமாளி என்ற டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

பின்னர் விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவரும் இவரது மனைவி கிருத்திகாவும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வந்தனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் மற்றும் youtube சேனல்களில் மிக ஆக்டிவாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் போடும் குக்கிங் வீடியோக்கள் மற்றும் Vlogs வீடியோக்களுக்கும் பல லட்சம் பார்வையாளர்கள் உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் தங்களுடைய உடை இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர். அதேபோலவே முயற்சி செய்யும் வகையில் சரத்தும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இது கடுமையான சர்ச்சையை கிளப்பியது. சரத்தை பலரும் திட்டி தீர்த்தனர்.

இந்த புகைப்படத்தை முதலில் பார்த்த அனைவரும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து டேக் கேர் என்றும், உடல் நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கமெண்ட் செய்தனர். ஆனால் பின்பு தான் தெரிந்தது அவர் ரன்வீர் மற்றும் விஷ்ணு விஷால் வரிசையில் இவ்வாறு இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார் என்று. மேலும் இந்த படத்தை உடனடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால் சரத் மீது வழக்குகள் பாயும் என்றும் பலர் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.ர் ஏற்கனவே ரன்வீர் சிங் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து இருக்கும் நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷாலும் சரத்தும் இவ்வாறு செய்துள்ளது தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திரைத்துறையில் இருக்கும் பல பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இவர் போன்றவர்கள் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
