ஸ்ரீமதியை வார்டன் உள்ளிட்ட 4 பேர் தூக்கி செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியானது..

கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு சம்பவம் என்று சொன்னால், அது கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் இறப்பு தான். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி இவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் பரவின. ஆனால் இவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பின் மண்டையில் அடிபட்டு, அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாலேயே இறந்துவிட்டதாகவும் பிரதே பரிசோதனை அறிக்கை வெளியானது. வயிற்று மார்பு பகுதிகளில் நகக் கீறல்கள் இருப்பதால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர்கள் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு சந்தேகத்தை கிளப்பி வந்தனர்.

ஸ்ரீமதியை வார்டன் உள்ளிட்ட 4 பேர் தூக்கி செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியானது.. 1

விளம்பரம்

அந்த பெண்ணின் பெற்றோர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளிக்கு முன்பு அமைதியான முறையில் போராடி வந்தனர். ஆனால் இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ரெக்கார்டுகள், மேசை போன்ற அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. பலர் மேஜைகளை நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினர். பள்ளிக்கு சொந்தமான 50 பேருந்துகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதனால் பள்ளி மொத்தமாக உருக்குலைந்து போனது. பள்ளியின் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும், 3500 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்ததிற்கு ஸ்ரீமதியின் தாயார் தான் முழு பொறுப்பு என பள்ளி விளக்கம் அளித்தது.

தொடர்புடையவை  `சாமான்ய மக்களை பாதிக்கும்' ரெயில் கட்டணம் உயர்வு! காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்!!

ஸ்ரீமதியை வார்டன் உள்ளிட்ட 4 பேர் தூக்கி செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள் வெளியானது.. 3

விளம்பரம்

 

இந்த நிலையில் பலரும் ஸ்ரீமதியின் இறப்பிற்கு நீதி கேட்டு வரும் நிலையில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. மாணவி உடல் 11 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவி உயிரிழந்த போது எடுக்கப்பட்ட cctv காட்சிகள் ஏன் வெளியாகவில்லை என்ற கேள்விகள் எழுந்த நிலையில் 20 நாட்களுக்கு பின்பு அவரது உடலை தூக்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஹாஸ்டல் வார்டன், மற்றும் இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து காலை 5.30 மணி அளவில் ஸ்ரீமதியின் உடலை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sathiyam News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment