cwc-ல என்ன சமைக்கணும்னு முதல் நாளே சொல்லிடுவாங்களா? உண்மைகளை போட்டு உடைத்த ஸ்ருதிகா

மக்களை மகிழ்வித்து வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிகளும் சரி, பலருக்கும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கொரோனா ஊரடங்கின்போது பலரும் மன அழுத்தத்தில் இருந்த போது, அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஆக இருந்த நிகழ்ச்சி இது என்று சொன்னால் மிகையில்லை. இந்த நிகழ்ச்சியை பார்த்து சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு குக்குகளுடன் இணைந்து கோமாளிகள் அப்படி அலப்பறை செய்து விடுவர். பொதுவாகவே சமைக்கும் போது மிகச் சீரியஸாக இருந்தால்தான் உணவு நன்றாக வரும். ஆனால் கோமாளி என்ற பெயரில் தொந்தரவுகளைக் கொடுக்கும் உதவியாளரை வைத்துக்கொண்டு, ஒரு சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு வெற்றிகரமாக மாற்றிக் காட்ட முடியும் என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சி மட்டுமே. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

cwc-ல என்ன சமைக்கணும்னு முதல் நாளே சொல்லிடுவாங்களா? உண்மைகளை போட்டு உடைத்த ஸ்ருதிகா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி மூன்று சீசன் வரை கடந்து விட்டது. முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றுள்ளனர். மூன்று சீசன்களிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் உள்ளனர். ரக்‌ஷன் இந்த நிகழ்ச்சியை மூன்று சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு இந்த மூவரும் மற்றுமொரு காரணம். தங்களுடைய நிலையை விட்டு இறங்கி வந்து கோமாளிகளுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகள் இன்னும் காமெடியை வரவழைக்கும். மேலும் மூன்று சீசன்களாக புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி, சரத், போன்றவர்கள் கோமாளிகளாக பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசனில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா ஒரு பேட்டியின் போது இந்த நிகழ்ச்சி குறித்து கூறிய கருத்து சர்ச்சையானது. அதில் அவர் முதல் நாளே அடுத்த நாள் என்ன சமைக்க வேண்டும் என்று அனுப்பிவிடுவார்கள் என்று கூறினார்.

விளம்பரம்

இது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவு நாள் அங்கு நிற்கும் போது தான், சர்ப்ரைஸாக அன்றைய தினம் என்ன சமைக்க வேண்டும் என்பதை நடுவர்கள் வெளிப்படுத்துவார்கள். இதை நாமும் இத்தனை காலம் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் என்ன சமைக்க வேண்டும் என்பதை முதல் நாளே மெசேஜ் ஆக அனுப்பி விடுவார்கள் என்று ராகுல் தாத்தா கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவிடம் கேட்டபோது அது போல் எல்லாம் ஒன்றும் கிடையாது அங்கு சென்ற பின்பு தான் அவர்கள் என்ன சமைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதில் நாங்கள் வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து உணவுகளை சமைத்ததாக ஸ்ருதிகா கூறினார். அந்த வீடியோவை நீங்களும் காண… Watch the below Video..

விளம்பரம்

 

தொடர்புடையவை  Mid Week Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா .?

Youtube Video Code Embed Credits: Little Talks

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment