கேப்டன் விஜயகாந்த் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில அதிர்ச்சிகரமான தகவல்களை கொடுத்திருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில் கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் என்று சில நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் உண்மை புகைப்படம் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை காட்டி உண்மையை பிரேமலதா விஜயகாந்த் மறைப்பதாக பயில்வான் கூறியுள்றார். தற்போது அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகம், அரசியல் உலகம் என இரண்டிலும் பல லட்சம் தொண்டர்களையும், ரசிகர்களையும் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிக மோசமடைந்து விட்டதாகவும், செயற்கை சுவாசம் பொருத்தியிருப்பதாகவும் தகவல் வெளியானது. மேலும் தொண்டையில் குழாய் போட்டு சுவாசம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “வதந்திகளை நம்ப வேண்டாம், கேப்டன் நலமாக இருக்கிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார்_ நான் அருகில் இருந்து அவரைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருப்பினும் தொடர்ந்து சர்ச்சை ஓயாத நிலையில் கேப்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை அவரது மகன் சண்முக பாண்டியன், சண்முக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பயில்வான் ரங்கநாதன், “இது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமே இல்லை ஒரு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், தொண்டர்களையும் ரசிகர்களையும் ஆறுதல் படுத்துவதற்காக பிரேமலதா இப்படி செய்கிறார். நடிகர் சங்கத்திலிருந்து சென்ற நாசர், செல்வமணி கூட விஜயகாந்தை சந்திக்க முடியவில்லை. இதை செல்வமணியே வெளிப்படையாக கூறிவிட்டார். நிலைமை இப்படி இருக்கும் நிலையில் மருத்துவமனையில் கண்ணாடி போட்டுக்கொண்டு, ஆடை அணிந்து கொண்டு எப்படி கேப்டனால் இருக்க முடியும்? என பயில்வான் கேள்விகளை எழுப்பி இருக்கிறார். தொண்டர்களை திருப்தி படுத்த பிரேமலதா இவ்வாறு ஏமாற்றுகிறாரா? என்று தற்போது நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Metro Mail Tamil