விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் சூரி பேசிய கருத்து தற்போது இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் பயில்வான் ரங்கநாதனும் சூரியை கிழித்து தொங்க விட்டிருக்கிறார். மதுரையில் நடிகர் கார்த்திக் மற்றும் அதிதியின் நடிப்பில் உருவாகி இருக்கின்ற விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு படத்தின் பாடல் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற்றது. இதல் பேசிய சூரி, சூர்யாவையும், கார்த்தியையும் புகழ்ந்து பேசினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் குடும்பத்தை பொறுத்தவரை, அவர்கள் அகரம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை தொடங்கி பலருக்கும் கல்வி வழங்கி வருகின்றனர். மேலும் நடிகர் கார்த்திக் விவசாயிக்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில அமைப்புகளையும் நடத்தி விவசாயிகளுக்கு நன்மைகள. செய்து வருகிறார். இதை மேற்கோள் காட்டி பேசிய சூரி, ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல ஜென்மத்திற்கும் பேசப்படும் என்று சூர்யாவை புகழ்ந்து பேசினார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிலர் சூரியை பார்த்து நீங்கள் மதுரையில் ஹோட்டல் கட்டியதிற்கு பதிலாக ஒரு கல்விக்கூடம் கட்டி இருக்கலாமே? என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் ஜோதிகா, இதே போன்ற கருத்தை பேசியிருந்தா.ர் கோவில்களுக்கு செலவழிப்பதை விட ஏழைகளுக்கும், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கும் செலவளியுங்கள் என்று ஜோதிகா கூறியிருந்தார். அப்போதே ஜோதிகாவை பலரும் விமர்சித்து பேசி இருந்தனர். தற்போது சூரியன் இந்த கருத்து மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.

தற்போது இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் சூரியை கிழித்து தொங்கவிட்டுள்ளார். சூரி ஏன் கோவில் கட்டுறத பத்தி மட்டும் பேசுற? மசூதி சர்ச் கட்டுறத மட்டும் பேசு, இந்துக்கள் என்ன இளிச்சவாயானா? சாலிகிராமத்தில் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக சோத்துக்கு வழி இல்லாம இருந்தவன் தானே நீ என்று இன்னைக்கு ஓட்டல் எல்லாம் கட்டி பெரிய ஆள் ஆயிட்டன்னு பழசை எல்லாம் மறந்துடுவியா என்று கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார். மேலும் சுற்றுலாவிற்கு வருபவர்கள், உன் படத்தையோ, உன் ஸ்டியோவோ, கல்விச்சாலையையோ யாரும் பார்க்க மாட்டாங்க. எல்லாரும் மதுரை மீனாட்சி, தஞ்சாவூரை தான் பார்ப்பாங்க, படிக்கிறது தான் முக்கியமா? நீ படிச்சிட்டுதான் கோடி கோடியா சம்பாத்திக்கிறியா? இதுதான் கடைசி முறை என்று எச்சரித்து பேசியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: I Think Sakthi