அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நாமினேஷனில் எட்டு பேர் சிக்கிய நிலையில், தற்போது வெளியேறப் போகும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. பல கோடி மக்கள் பார்த்து ரசிக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக் பாஸ். ஆறு சீசன்களை முடித்து தற்போது ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பெரிய அளவில் சுவாரசியமாக செல்லவில்லை என்று தான் கூற வேண்டும். கண்டன்டுக்காக பல சண்டைகள் நடந்து வரும் நிலையில் கூட டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து சன் டிவியே முதலிடத்தைப் பிடித்து வருகிறது.

மேலும் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நிகழ்ச்சியில் ஏதும் சுவாரசியமாக இல்லை. 24 மணி நேரம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பும் போது கூட சமையலறையில் போட்டியாளர்கள் நேரம் செலவிடுவதையே பெரிதாக காட்டிக் கொண்டிருக்கின்றனர். இது பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது மட்டுமல்லாமல் கமலஹாசனின் பெயரும் பெரிய அளவில் டேமேஜ் ஆனதால் அவர் இந்த சீசனுடன் விலகிக் கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஒன்பதாவது வாரமான இந்த வாரம் தினேஷ், விசித்ரா, மணி, கூல் சுரேஷ், பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா, அனன்யா என மொத்தம் எட்டு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் அனன்யா ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு, வைல்ட் கார்டு என்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். வந்த வேகத்தில் அவர் மீண்டும் நாமினேட் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் கணிசமான வாக்குகளை பெற்று அவர் முன்னிலை வகிக்கிறார். அதேபோல மணி, கூல் சுரேஷ், தினேஷ், விசிதிரா ஆகியோர் வழக்கம் போல சேஃப் ஜோனில் இருக்கிறார்கள். கடந்த வாரம் பூர்ணிமா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்.ஜே பிராவோ மற்றும் அக்ஷயா இருவரும் வெளியேறினர். எனவே கண்டென்ட் கொடுக்கும் நபராக இருக்கும் பூர்ணிமா இந்த வாரமும் வெளியேற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. விக்ரம் மற்றும் ஜோவிகா இருவரும் குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

இதில் விக்ரம் ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் போட்டியில் எந்த விதமான சுவாரசியமான வேலைகளையும் செய்வதில்லை.்ஆனால் முதலில் சுவாரஸ்யமான போட்டியாளராக இருந்த ஜோவிகா நாளடைவில் மிகுந்த மோசமான இடத்தை அடைந்தார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் மிகக் குறைவாகவே இருந்தது. மேலும் ஜோவிகா அடிக்கடி படுத்து உறங்குவதும், நாய் குரைப்பதுமாக இருப்பது பார்க்கும் ரசிகர்களுக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார். அவரால் கடந்த மூன்று வாரங்களாக எந்த கண்டென்டும் பெரிய அளவில் கிடைக்கவில்லை.

எனவே இந்த வாரம் ஜோவிகா வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நமது இணையதளத்தில் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் ஜோவிகா கடைசி இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.