பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான கடைசி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது மாயாவிற்கு பொதுமக்கள் ஒரு டாஸ்கை கொடுத்து இருக்கின்றனர். இதனால் மாயா மற்ற ஹவுஸ் மேட்ஸை போட்டு பாடாயப்படுத்துகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 94 நாட்களை நிறைவு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த பணப்பெட்டியை யார் எடுக்கப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஒரு லட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணப்பெட்டி டாஸ்க் தற்போது ஒன்பது லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் பணம் இன்னும் உயர்ந்தால் தான் பணப்பெட்டியை எடுப்பேன் என்று சொல்லி போட்டியாளர்கள் வெளிப்படையாகவே டிமாண்ட் செய்து வருவதால் பிக் பாஸ் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், “பணப் பெட்டியை யாரும் எடுக்கவில்லை என்றால் இந்த பெட்டியின் மதிப்பு உயரலாம் அல்லது குறையலாம். எதற்கும் வாய்ப்பு உண்டு என்று அவர் கூறியிருந்தார். எனவே பணப்பெட்டியை யார் எடுக்கப் போகிறார்கள்? என்கிற பரபரப்பு தற்போது எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், பிக் பாஸ் ரசிகர்களிடம் கேட்கப்படும் கேள்விகளை பிக் பாஸ் குழுவினர் ஹவுஸ் மேட்ஸிடம் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் யார் கண்ணுக்குத் தெரியாத போட்டியாளராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ரசிகர்கள் பலரும் ‘மாயா’ என்று பதில் அளித்துள்ளனர். எனவே மாயாவை கண்ணுக்குத் தெரியாத போட்டியாளராக பிக் பாஸ் அறிவிக்கிறார். மாயா எது செய்தாலும் அதை மற்ற போட்டியாளர்கள் கண்டுகொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television