“உன்னை தூக்கி விட்டதே கேப்டன் தான், அந்த ஆன்மா மன்னிக்காது” வடிவேலுவை விளாசிய ஆர்த்தி.!

தமிழ் திரையுலகிலும், அரசியல் உலகிலும் தனக்கென தனி இடத்தை பிடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்து நிறைந்திருப்பவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த மாதம் 28ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக காலமாகி இருந்தார். இவரின் மறைவுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். சுமார் 15 லட்சம் மக்கள் கேப்டனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திரைப் பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலர் கலந்து கொண்ட விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். ஆனால் வடிவேலு கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து பிரபல காமெடி நடிகையாக இருக்கும் ஆர்த்தி பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உன்னை தூக்கி விட்டதே கேப்டன் தான், அந்த ஆன்மா மன்னிக்காது" வடிவேலுவை விளாசிய ஆர்த்தி.! 1
அதில் அவர், “ஒருவர் இறந்து விட்ட பின்பு அவர் ஏன் வரவில்லை? என்று நம்மால் கேள்வி கேட்க முடியாது. அவர்களாக வரவேண்டும். ஆனால் கேப்டன் இறுதி நிகழ்வில் உள்ளே போனால் வெளியே வர முடியாத அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. விஜய் மேல் கூட செருப்பு தூக்கி வீசினார்கள். இதைப் பார்த்து கூட அவர்கள் பயந்து போய் இருக்கலாம். ஆனால் கேப்டனின் உண்மையான ரசிகர்கள் அவ்வாறு செருப்பை தூக்கி எறிந்து இருக்க மாட்டார்கள். இறுதி அஞ்சலி செலுத்துவது ஒரு மனசு வேண்டும். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு வடிவேலு வந்து மன்னிப்பு கேட்டிருக்கலாம். அவர் அப்படி கேட்டிருந்தால் கேப்டனின் ஆன்மா அவரை மன்னித்து இருக்கும்.

விளம்பரம்
தொடர்புடையவை  43 வயதில் அப்பாவான நரேன்.! முதல் முறையாக மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நரேன்.!

"உன்னை தூக்கி விட்டதே கேப்டன் தான், அந்த ஆன்மா மன்னிக்காது" வடிவேலுவை விளாசிய ஆர்த்தி.! 3
திரைத்துறையில் ஒன்றுமே இல்லாமல் இருந்தவருக்கு ஒரு குடை பிடிக்கும் காட்சியை கொடுத்து இவ்வளவு தூரம் ஆளாக்கிவிட்டதற்கு முக்கிய காரணமே கேப்டன் தான். குற்ற உணர்வு வடிவேலுவை கொன்றுவிடும். இனி எங்கே போய் மன்னிப்பு கேட்பீர்கள்? மேலே போய் மன்னிப்பு கேட்கிறீர்களா கேட்பீர்களா? அந்த ஆத்மாவிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். உங்களுக்கு அந்த கர்மா திருப்பி கிடைக்கும். தப்பு மேல் தப்பு செய்து கொண்டே செல்கிறீர்கள். எல்லா மக்கள் மனதிலும் நீங்கள் செய்வது ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். அவரின் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Kumudam

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment