மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு வந்த பூர்ணிமா..! கமல் முன்பு கெத்தாக பேசி அலறவிட்ட பூர்ணிமா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 96வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா தற்போது கமல் முன்பு வந்து நின்று கொண்டிருக்கிறார். மேலும் ஹவுஸ் மேட்ஸ் பற்றி அவர் கூறிக்கொண்டிருக்கிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பல கோடி மக்கள் பார்த்து வருகின்றனர். ஆனால் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பல விமர்சனங்களும், ட்ரோல்களும் இருக்கிறது என்று சொன்னால் அது இந்த சீசன் தான். குறிப்பாக நடுவராக இருக்கும் கமலஹாசன் மீதும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பிக்பாஸ் மேடைக்கு வந்த பூர்ணிமா..! கமல் முன்பு கெத்தாக பேசி அலறவிட்ட பூர்ணிமா.! 1

23 போட்டியாளருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏழு பேர் மட்டுமே மீதம் இருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.16 லட்சத்துடன் பூர்ணிமா வெளியேறி இருந்தார். தற்போது மீதம் அர்ச்சனா, விசித்ரா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணு, விஜய் வர்மா ஆகிய ஏழு பேர் மட்டுமே போட்டியில் நீடித்து வருகின்றனர். இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகியிருந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்புகளில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டனர். இதனால் மாய மற்றும் பூர்ணிமா இருவரும் வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறிவிட்டதால் யாரும் எதிர்பாராத விதமாக விசித்ராவை தற்போது எலிமினேட் செய்து பிக் பாஸ் குழுவினர் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பணப் பெட்டியுடன் பூர்ணிமா கமல் முன்பு நின்று பேசிக்கொண்டிருக்கிறார். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவர் பற்றி அவர் கூறிக்கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Disney + Hotstar Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்