கேப்டன் மில்லர் படத்தின் ட்ரைலரை தற்போது படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக உயர்த்திருப்பவர் நடிகர் தனுஷ். கஸ்தூரிராஜாவின் மகனும் இயக்குனர் செல்வராஜின் தம்பியுமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என பல துறைகளிலும் பணியாற்றி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி சுமார் 46 படங்களில் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். தற்போது தனது 47வது படமான கேப்டன் மில்லர் படத்திலும், தேரே இஸ்க் மேன் என்ற ஹிந்தி படத்திலும், பெயரிடப்படாத தனது 50 வது படத்திலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஒவ்வொரு அப்டேட்டுகளாக வெளியாகி வருகிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது. தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ட்ரைலர்வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்திப் கிஷன், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

பிணக்குவியல்களுக்கு மத்தியில் கையில் துப்பாக்கியுடன் தனுஷ் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது. இதனால் இந்த படம் போர்க்காட்சிகள் நிறைந்த படமாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படம் வருகிற ஜன12ம் தேதி வெளியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியுள்ள அந்தட்ரைலரை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sathya Jothi Films