பிக் பாஸ் சீசன் 7 தொடங்கி தற்போது நாளையுடன் நிறைவடைய இருக்கிறது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 105வது நாளுடன் நிறைவடையை இருக்கிறது. முந்தைய சீசன்களைப் போல அல்லாமல் இந்த சீசனில் மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்திருந்தனர். இதில் 17 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், 6 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி ஆகி இருந்தனர். மிட் வீக் எவிக்ஷன் பெயரில் விஜய் வர்மா எலிமினேட் ஆன நிலையில், மீதம் 5 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு செல்ல இருக்கின்றனர். விஷ்ணு, தினேஷ், மணி, அர்ச்சனா, மாயா ஆகிய ஐந்து பேர் இறுதி போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றனர். இதில் யார் டைட்டிலை வெல்லப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் எடுக்கப்படும் வாக்கெடுப்புகளில் அர்ச்சனா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். எனவே அவர்தான் டைட்டிலை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து மணி இரண்டாவது இடத்திலும், தினேஷ் மூன்றாவது இடத்தையும், மாயா நான்காவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். விஷ்ணு கடைசி இடத்தை பிடித்திருக்கிறார். எனவே அர்ச்சனா வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி எபிசோடு இன்றைக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான முதல் ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.
“நீங்கள் உடைந்து உங்களைத் தேடிய தருணங்கள்” என்று பிக் பாஸ் குறும்படம் ஒன்றை போட்டு காண்பிக்கிறார். அந்த வீடியோவை பார்த்த போட்டியாளர்கள் பலரும் கண்கலங்கி அழுகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television