அனைவரும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க தேதியை தற்போது விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. வழக்கம் போல இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் முன்பு வெளியான ப்ரோமோக்களில் இரண்டு வீடு என்றும், இருபது போட்டியாளர்கள் என்றும் கமலஹாசன் அறிவித்திருந்ததால் இன்னும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 ல்கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் யூகங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருந்தது. அதன்படி கோயம்புத்தூர் பேருந்து ஓட்டினர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், குக் வித் கோமாளி பிரபலங்கள் சந்தோஷ் பிரதாப் தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, விஜே ரக்ஷன், விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், ரட்சிதாவின் கணவர் தினேஷ், பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகர் பப்லு, சோனியா அகர்வால், விஜே பார்வதி என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் முந்தைய சீசன்கள் போல் அல்லாமல் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் சீசன் 7 தொடங்க இருக்கும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர் விஜய் டிவி. அதன்படி அக்டோபர் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு சீசன் 7 கோலாகலமாக தொடங்க இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television