விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் மலர்ந்த காதல்.! விஷ்ணுவிடம் காதலை சொல்ல தயாரான பூர்ணிமா.?

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சி யில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் விஷ்ணு மற்றும் பூர்ணிமாவிற்கு இடையே நடக்கும் உரையாடல்களை வீடியோவாக பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் தனக்கு விஷ்ணு மீது ஃபீலிங்ஸ் இருப்பதாக பூர்ணிமா கூறிக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவரும் காதலிக்கிறார்களோ? காதல் கன்டென்ட் கொடுக்க ரெடியாகி விட்டார்களோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 45 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 46வது நாளான இன்று மற்ற ஹவுஸ்மேட்ஸ் போல உடை அணிந்தும் அவர்கள் மாதிரி நடந்து கொள்ளவும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஷ்ணுவுக்கும் பூர்ணிமாவுக்கும் மலர்ந்த காதல்.! விஷ்ணுவிடம் காதலை சொல்ல தயாரான பூர்ணிமா.? 1
ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்கள் போல வேடம் அணிந்து கொண்டும், பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்கள் போல வேடம் அணிந்தும் வாக்குவாதம் செய்து ஆண் போட்டியாளர்கள் சிறந்தவர்களா? அல்லது பெண் போட்டியாளர்கள் சிறந்தவர்களா? என்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதத்தின் முடிவில் ஆண்களே சிறந்த போட்டியாளர்கள் என்று சொல்லி மணிக்கு கோல்டன் ஸ்டாரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமா ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் விஷ்ணுவும் பூர்ணிமாவும் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.


அதில் விஷ்ணு, “தன்னை தினேஷ் பொறுக்கி என்று கூறுகிறார். நான் அதுபோல் நடந்து கொண்டது கிடையாது. நான் எந்த பெண்ணை காட்டினாலும் என்னுடைய வீட்டில் திருமணம் செய்து வைப்பார்கள்” என்று கூறுகிறார். அப்போது பூர்ணிமா, “எனக்கு ஒரு ஃபீலிங்ஸ் இருக்கிறது. உங்களுக்கு என்ன தோணுதோ என்னிடம் சொல்லுங்கள். பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுங்கள்” என்று கூறுகிறார். அதற்கு நான் அப்படி எதுவுமே சொல்லவில்லையே என்று விஷ்ணு பதில் அளிக்கிறார். இதனால் பூர்ணிமாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்