மேகனாவுக்காக தமிழையும் சரஸ்வதியையும் பிரித்த நமச்சி.! நமச்சியின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரஸ்வதியும் தமிழும் ஒரு பூங்காவில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது மேகனா அந்த இடத்திற்கு வருகிறார். அவர்கள் இருவரையும் மேகனா பார்த்து விடக் கூடாது என்பதற்காக நமச்சி தமிழையும் சரஸ்வதியையும் பிரித்து வைக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலை இப்படி இரண்டு பொண்டாட்டி கதையாக மாற்றுகிறீர்கள் என்று கோபமாக கமெண்ட்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேகனாவுக்காக தமிழையும் சரஸ்வதியையும் பிரித்த நமச்சி.! நமச்சியின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.! 1

விளம்பரம்

‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் தற்போது தமிழுக்கு மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் மேகனாவின் அறிமுகம் கிடைக்கிறது. தொழில் விஷயமாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது மேகனாவுக்கும் தமிழுக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. தமிழுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பது மேகனாவுக்கு தெரியவில்லை. நமச்சியும் இந்த விஷயம் மேகனாவுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறார். அதேபோல தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழும், சரஸ்வதியும் பூங்காவில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு மேகனாவும் தொழில் விஷயமாக வருகிறார். இதை பார்த்த நமச்சி மேகனா இருவரையும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக தமிழையும் சரஸ்வதியும் தனித்தனியாக பிரித்து விடுகிறார்.

தொடர்புடையவை  விருது வழங்கும் விழாவில் அசிங்கப்பட்ட ராதிகா.! மேடையில் கெத்து காட்டிய பாக்கியா.!

மேகனாவுக்காக தமிழையும் சரஸ்வதியையும் பிரித்த நமச்சி.! நமச்சியின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.! 3
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நன்றாக இருந்த கதையை 2 மனைவி கதையாக மாற்றி விட்டீர்கள். தமிழின் மனைவி சரஸ்வதி என்பதை மேகனா அறியும்படி செய்யுங்கள், இல்லை என்றால் கதையை முடித்து விடுங்கள் என கோபமாக பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment