கலகத்தைத் தொடங்கிய மாயா.! நிக்ஸனுக்கு எதிராக மாயா செய்த சதி.! பறிபோகும் கேப்டன் பதவி.?

வெளியிட்டது

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஆறு சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மாயா தனக்கு அநீதி நடந்து விட்டதாக கூறி நீதி கேட்டு மணியை அடிக்கிறார். மூன்று முறை மணி அடிக்கப்பட்டதால் நிக்ஸனின் கேப்டன் பதவி பறிபோகுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அனன்யாவுடன் சேர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்து உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கலகத்தைத் தொடங்கிய மாயா.! நிக்ஸனுக்கு எதிராக மாயா செய்த சதி.! பறிபோகும் கேப்டன் பதவி.? 1
பிக் பாஸ் வீட்டின் விதிகளைப் பொறுத்தவரை அந்த வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. ஆனால் கூல் சுரேஷ் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக மாயா கேப்டனாக இருந்த போது பிக் பாஸிடம் பேசி வீட்டிற்கு வெளியே மட்டும் உடற்பயிற்சி செய்ய அனுமதி கொடுத்திருந்தார். இன்று மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் கூல் சுரேஷ் வெளியில் உடற்பயிற்சி செய்ய முடியாத காரணத்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். இவர் எப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் வரலாம் என்று சொல்லி மாயா கோபத்தை வெளிப்படுத்துகிறார். நீங்கள் கூல் சுரேஷ் செய்வதை கட்டுப்படுத்தவில்லை என்று சொல்லி நிக்ஸன் மீது அதிருப்தி தெரிவித்தார்.


தொடர்ந்து நிக்ஸனுக்கு எதிராக வீட்டில் வைக்கப்பட்டிருந்த மணியையும் அவர் அடிக்கிறார். இதனால் மூன்று முறை தொடர்ந்து மணி அடிக்கப்பட்டதால் நிக்ஸனின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, அடுத்த வாரம் நேரடி நாமினேஷனுக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்