விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதால் பலருக்கும் இந்த நாடகத்தை பார்க்க சலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தார். அவர் குக் வித் கோமாளியில் பங்கு பெறுவதற்காக நாடகத்தை விட்டு விலகினார். அவர் விலகலுக்குப் பின்பு டிஆர்பியில் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு வினிஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பலரும் இந்த சீரியலை விட்டு விலகி சென்று விட்டனர். இருந்தபோதிலும் இந்த சீரியல் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், இந்த கதை முடிவுக்கு வந்துவிடும். ஆனால் அதை செய்யாமல் கதையை இழுத்து அடித்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பலரும் இந்த கதையை முடித்து விடுமாறு சமூக வலைத்தளங்களில் நாடகத்தின் இயக்குனருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தத் தொடரில் குழந்தை கதாபாத்திரமாக லெட்சுமி கேரக்டரில் நடித்து வருபவர் ராக்ஷி. ஹேமா கதாபாத்திரத்தில் லிசா என்ற குழந்தையும் நடித்து வருகின்றனர். லெட்சுமி கதைப்படி கண்ணம்மாவிடத்தில் வளர்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையான ஹேமா பாரதியிடம் வளர்ந்து வருகிறார். கதையின் பிரச்சினையே கண்ணம்மாவிடம் வளரும் இந்த லட்சுமி தன்னுடைய குழந்தை இல்லை என்று பாரதி நம்புவது தான். இதில் இந்த லட்சுமி மற்றும் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் இரு குழந்தைகளும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது கதைப்படி பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அந்த டெஸ்டில் பாசிட்டிவ் என வந்தால் கதை முடிவுக்கு வந்து விடும், நெகடிவ் என வந்தால் மீண்டும் இழுவை ஆரம்பமாகும்.தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க உள்ளனர். பாரதிக்கும் டி என் ஏ டெஸ்ட் முடிவுகள் வர உள்ளது. இதனால் கதை முடிவுக்கு வரும் என்றே தெரிகிறது. ரசிகர்களின் பல நாள் கோரிக்கையை அடுத்து 6 வருடங்களுக்கு பிறகு கதை முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Vijay Television