அத்துமீறிய தீவிரவாதிகள்.! ஆங்காரம் கொண்ட காளியாக மாறிய கண்ணம்மா.! இனிமே வேட்டை ஆரம்பம்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இந்த தொடர் கருப்பாக இருக்கும் மருமகளை ஏற்றுக்கொள்ளாத மாமியாரை எப்படியாவது ஏற்றுக் கொள்ள வைத்து விட வேண்டும் என்று தான் கதையை தொடங்கினர். ஆனால் ஐந்து வருடங்கள் கடந்த பின்பு இந்த கதை எங்கே எங்கேயோ சென்றுவிட்டது. இதய நோய் சிறப்பு மருத்துவராக இருக்கும் பாரதிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்று, பாரதியின் தோழி வெண்பாவால் ஏமாற்றப்பட்டு வருகிறார். அதற்கு காரணம் பாரதியை வேறு யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்று வெண்பா சூழ்ச்சி செய்து இவ்வாறு செய்துள்ளார். ஆனால் திடீரென ஒரு நாள் பாரதி கண்ணம்மா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்த நிலையில் பாரதியின் மனைவி இரட்டை குழந்தைக்கு தாயானார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அத்துமீறிய தீவிரவாதிகள்.! ஆங்காரம் கொண்ட காளியாக மாறிய கண்ணம்மா.! இனிமே வேட்டை ஆரம்பம்.! 1

இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் பாரதி. இரட்டை குழந்தைகளில் ஒன்று கண்ணம்மா விடமும், ஒன்று பாரதியிடமும் வளர்ந்து வருகிறது. தற்போது கதைப்படி கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தைக்கு பாரதி தான் தனது அப்பா என்று தெரிய வருகிறது. பாரதிக்கும் கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்று தெரிய வருகிறது. ஆனால் இந்த கதையை ஒரு சிறிய டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்த்து அதன் மூலமாக முடித்து விடலாம். ஆனால் இதன் இயக்குனர் அதை செய்யாமல் கதையை எங்கெங்கோ இழுத்தடித்து வருகிறார். அதனால் கதையை முடித்து விடும்படி பலரும் இயக்குனரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாரதியின் மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றி விடுகின்றனர். அதை கண்ணம்மா தனியாளாக இருந்து எதிர்கொண்டு வருகிறார். அதை தெரிந்து கொண்ட பாரதி அவர்களை மீட்டு வருவதற்காக செல்கிறார். ஆனால் பிணை கைதிகளாக இருக்கும் பெண்களிடம் தீவிரவாதிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். அதுபோலவே கண்ணம்மாவிடமும் அத்து மீறுகின்றனர். ஆனால் அவர்களை தனி ஒரு ஆளாக இருந்து கண்ணம்மா எதிர்கொள்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video…

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்